twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொலை விளையும் நிலம்.... ஊடகர்களுக்கு ஒரு இளம் இயக்குநரின் கோரிக்கை!

    By Shankar
    |

    ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

    பணிபுரியும் நிறுவனம் எந்த சார்பெடுத்தாலும் கூட நாம் நமது உணர்வுகளைக் காட்ட தயங்கியதில்லை. நிகழ்ந்தது மிகப்பெரிய சமூக அவலம். விவசாயிகளின் தொடர் மரணங்களை எந்த சார்பும் இல்லாமல் பதிவு செய்தவர்கள் நீங்கள்தான்.

    இருநூறுக்கு மேற்பட்ட விவசாயிகள் கொத்து கொத்தாக மடிந்த நிலையில் வெறும் 82 மரணங்களை மட்டும் கணக்கில் காட்டியபோதும் அந்த மரணங்களும்கூட சொந்தக் காரணங்களுக்கு தான் நிகழ்ந்தவை என்று மரணத்தில் கூட விவசாயி அவமானப்படுத்தப்பட்டபோதும் விவசாயிகளுக்கு ஆதரவாக எழுதியவர்கள் நீங்கள்தான்.

    A Young director's appeal to Media persons

    உங்கள் எழுத்துகளையும் எண்ணங்களையும்தான் நான் நிரந்தர ஆவண சாட்சியமாக பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இந்த அவலத்துக்கு இயற்கை மட்டுமே காரணம் அல்ல. சில ஆக்டோபஸ் கரங்கள்தான் விவசாயிகளின் கழுத்தை நெரித்தன. இந்த உண்மையை உரக்க சொல்லும் படைப்பே எனது கொலை விளையும் நிலம்.

    அந்த ஆக்டோபஸ் கரங்கள் எங்கு வேண்டுமானாலும் நீளும் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் சரியான திட்டமிடலை ரகசியமாக செய்தேன். கடந்த மாதமே பிஆர்.ஓ யூனியன் மூலமாக நேரம் முன்னுரிமை பெறப்பட்டது. கடைசி இரண்டு நாட்கள்தான் இதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதும் திட்டமிடலின் ஒரு பகுதியே. ஆனால் கரங்கள் என் கழுத்தை நெரிக்காமல் நேரடியாக என் ஊடக நண்பர்களின் கழுத்தை நெரிக்கின்றன. வேண்டுமென்றே இரண்டு நிகழ்வுகள் அதுவும் தவிர்க்கவே முடியாதபடி இன்று மாலை 3- 4 மற்றும் 6.30 என்று என் பட திரையிடல் நேரத்தை அபகரித்துக்கொண்டார்கள். இது ஊடக நண்பர்கள் என் படத்தை தவிர்க்க யாரோ சொல்லி சிலர் செய்யும் வேலை என்பது தெரிய வந்திருக்கிறது. சாப்பிடும் சோற்றுக்கு துரோகம் செய்யும் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

    விவசாயிகளின் குரல்வளையை நெரித்து புரமோட் செய்யப்படும் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற நானும் வேண்டிக்கொள்கிறேன்.
    இந்த நெருக்கடி மற்றும் குழப்பத்தினால் அச்சடித்த அழைப்பிதழ்களில் பாதியைக் கூட பகிர முடியவில்லை.
    4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் இருந்து சாலிகிராமம் வந்து படத்தை பார்த்துவிட்டு மீண்டும் 6.30க்கு ராயப்பேட்டை செல்வது என்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். இந்த அதிகார பலத்தை எதிர்த்து நிற்க என்னிடம் பணபலம் இல்லை. ஆனால் இந்த படத்தில் ஒலிப்பது என் எழுத்தோ, சமுத்திரக்கனி குரலோ, ராஜு முருகன் வரியோ, ஜிவி.பிரகாஷ் இசையோ அல்ல... அத்தனையும் பலியான விவசாயக் குடும்பங்களின் வேதனைக் குரல்கள். அந்தக் குரல்களுக்கு மதிப்பளித்து திரையிடலில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று கண்ணீருடன் கேட்டுக்கொள்கிறேன். இதை நீங்கள் செய்தியாக்க வேண்டும் என்றுகூட கேட்கவில்லை. ஆனால் அவசியம் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.
    நிகழ்ச்சிக்கு முன்னணி ஹீரோக்கள், பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
    உணர்வோடு சேர்த்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    நன்றி. வணக்கம்.

    - க.ராஜீவ் காந்தி
    இயக்குநர், கொலை விளையும் நிலம்

    English summary
    Ka Rajiv Gandhi, a young director who made his first documentary on farmers suicides in delta districts 'Kolai Vilaiyum Nilam' sent an appeal to media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X