அச்சு அசல் மறைந்த சீரியல் நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம் பெண்... தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: மறைந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம்பெண்ணின் போட்டோக்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Pandian Stores முல்லை போல் இருக்கும் இவர் யார்? | Chithra VJ

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் கணவருடன் ஹோட்டல் அறையில் இருந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடத்தையில் சந்தேகம்

நடத்தையில் சந்தேகம்

இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேமந்திடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சித்ராவின் நடத்தையில் சந்தேகமிட்டு சண்டை போட்டதை ஒப்புக்கொண்டார். தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,

திடுக்கிடும் தகவல்கள்

திடுக்கிடும் தகவல்கள்

இருந்த போதும் சித்ராவின் மரணத்தில் தொடரும் சந்தேகங்களால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே சித்ரா மரணம் தொடர்பாக நாள் தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்

பாண்டியன் ஸ்டோர்

சித்ராவுடன் பழகிய பல பிரபலங்கள், அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார் சித்ரா.

முல்லை கேரக்டர்

முல்லை கேரக்டர்

பலருக்கும் பிடித்தமான கேரக்டர் அது என்பதால் ரசிகர்களும் அந்த சீரியல் குழுவினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சித்ரா மரணமடைந்ததால் முல்லை கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்திலும் இருந்தனர் சீரியல் குழுவினர்.

பாரதிகண்ணாம்மா நடிகை

பாரதிகண்ணாம்மா நடிகை

நடிகை சரண்யா முல்லையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்தார் சரண்யா. இந்நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை காவ்யா இனி முல்லையாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சித்ரா போன்றே..

சித்ரா போன்றே..

இந்நிலையில் மறைந்த நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம் பெண் ஒருவரின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தனா தினகர் என்ற பெயருடன் சமூக வலைதளத்தில் உள்ள அந்த பெண் முல்லை கேரக்டர் சித்ராவை போன்று போட்டோ ஷுட் நடத்திய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

முல்லை போன்று கெட்டப்

முல்லை போன்று கெட்டப்

அதில் சித்ரா ஹேர் ஸ்டைலில் அவர் உடுத்தியிருக்கும் சேலை, அணிகலன்கள், பார்வை என அப்படியே அச்சு அசலாக அவரை போன்றே போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை பார்க்கும் சித்ராதானோ என்று யோசிக்கும் வகையில் உள்ளது அந்த போட்டோக்கள்.

எனக்கு வரும் கமெண்ட்

எனக்கு வரும் கமெண்ட்

இந்த போட்டோக்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் அந்தப் பெண், கூடவே ஒரு பதிவையும் ஷேர் செய்துள்ளார். அதில் இத்தனை ஆண்டுகளாக நான் எங்கு சென்றாலும் முதலில் எனக்கு வரும் கமெண்ட் நீங்கள் சித்து, முல்லை, சின்ன பாப்பா பெரிய பாப்பா நடிகை போன்று இருக்கிறீர்கள் என்பதுதான்.

ஒரிஜினாலிட்டியுடன்..

ஒரிஜினாலிட்டியுடன்..

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இப்படி கமெண்டுகளை பெறுவதால் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை ஏனெனில் நான் அப்படி இல்லை என்று நினைத்ததால். மேலும் நான் என்னுடைய ஒரிஜினாலிட்டியுடன் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

ஆடிஷன் கொடு

ஆடிஷன் கொடு

ஆனால் இப்போது மக்கள் அதை சொல்லும் போது ஒரே மாதிரி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் யாரையாவது ஒருவரை சந்தோஷப்படுத்தலாம் என்று. சித்ரா இறந்த நாள் முதல் என்னுடைய ஃபிரண்ட்ஸ், எனக்கு தெரிந்தவர்கள் என எல்லோரும் அந்த டீமை அணுகி ஆடிஷன் கொடு, நிச்சயம் உன்னை எடுப்பார்கள் என்று கூறுகின்றனர்.

இன்னும் மெஸேஜ் வருகிறது

இன்னும் மெஸேஜ் வருகிறது

முதலில் இதை கேட்ட போது என்னை வைத்து காமெடி செய்கிறார்கள் என்று நினைத்தேன். கேட்டு சிரித்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் இப்போது வரை அதே மாதிரியான மெஸேஜ்கள் எனக்கு வந்து கொண்டிருக்கிறது.

ரீப்ளேஸ்மெண்ட் கேரக்டர்

ரீப்ளேஸ்மெண்ட் கேரக்டர்

முல்லை சித்து ரீப்பிளேஸ் செய்ய முடியாதவர். நாங்கள் அவரை நேசிக்கிறோம்.. எங்களுக்கு தெரியும் அவர்கள் ரீப்ளேஸ்மெண்ட் கேரக்டரை ஃபைனலைஸ் பண்ணியிருப்பார்கள்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த பலரும் சித்துவை போன்றுதான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X