கட்டிப்பிடித்து நச்சென இச்சு கொடுத்த இளைஞர்.. என்ஜாய் செய்த மீரா மிதுன்.. வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுனை பலர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பலருக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் ஏற்கனவே சில படங்களில் தலைக்காட்டி மீரா மிதுனுக்கு, உள்ளதும் போய் வருகிறது.
தொடர் சர்ச்சைகளுக்கு ஆளான மீரா மிதுன் அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் பாலிவுட் சினிமாவில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றவர் உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டினார்.

ஆடியோக்கள் சர்ச்சை
இதனால் பெயர் மேலும் கெட்டதுதான் மிச்சம். வாய்ப்பு ஒன்றும் கிடைத்தது போல் தெரியவில்லை. இதனால் சென்னை வந்த அவர் மீண்டும் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். தனது காதலருடன் போனில் மீரா மிதுன் அந்தரங்க விஷயங்களை டிஸ்கஸ் செய்த ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கட்டிப்பிடித்து முத்தம்
இந்நிலையில் அரைகுறை ஆடையில் ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கிறார் மீரா மிதுன். அப்போது அந்த இளைஞர் மீரா மிதுனை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இதனை ரசித்து சிரிக்கிறார் மீரா மிதுன்.

மீராதான் எடுத்துள்ளார்
மீரா மிதுன்தான் போனில் இந்த வீடியோவை எடுக்கிறார். அவர்தான் தனது டிவிட்டர் பக்கத்திலும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஹீ இஸ் கிரேஸி என்று கேப்ஷனும் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன்.

மறுக்காத மீரா மிதுன்
மீரா மிதுன் டேமேஜ்ஜான தனது பெயரை சரிசெய்ய திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவிக்காத மீரா, வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அனுமதித்த மீரா
இதனால் அவர் திருமணம் செய்து கொள்ள போவது உறுதி என்றும் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சுற்றி பலர் இருக்கும் போது இளைஞரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அனுமதித்திருக்கிறார் மீரா மிதுன்.

அது இவருதானா?
ஏற்கனவே மீரா மிதுன் வெளியிட்டுள்ள பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்களில் அந்த இளைஞர் இருந்துள்ளார். இதனால் மீரா மிதுன் திருமணம் செய்ய உள்ள அந்த இளைஞரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











