நடிகர் விஜயின் டாப் 10 பஞ்ச் டயலாக்ஸ்.. இளம் விமர்சகர் அஷ்வினின் அசத்தல் அனலைஸ்!

சென்னை: நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திரை விமர்சகர் அஷ்வின், அவரது டாப் பஞ்ச் டயலாக்ஸ் குறித்து அசத்தலாக அனலைஸ் செய்துள்ளார்.

Recommended Video

THALAPATHY MASS PUNCH DIALOGUES | ASHWIN ANALYSE |THALAPATHY BIRTHDAY SPECIAL |FILMIBEAT TAMIL

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உயர்ந்து நிற்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். சினிமா குடும்பத்தை பின்னணியாக கொண்ட விஜய் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள விஜய், தன்னுடைய தனித்துவமான நடிப்பு மற்றும் ஸ்டைலால் அடுத்த சூப்பர்ஸ்டார் அவர்தான் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

விமர்சகர் அஷ்வின்

விமர்சகர் அஷ்வின்

நடிகர் விஜய் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் குறித்த சுவாரசியமான தகவல்கள் பல செய்திகளாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இளம் திரை விமர்சகரான அஷ்வின் விஜயின் டாப் 10 பஞ்ச் டயலாக்ஸ் குறித்து அலசியிருக்கிறார்.

பஞ்ச் டயலாக்ஸ்

பஞ்ச் டயலாக்ஸ்

அதன்படி யூத் படத்தில் நடிகர் விஜய் பேசிய இங்க என்ன தோனுதோ அதை செய்வேன் இங்க என்ன தோனுதோ அதை பேசுவேன்.. மற்றும் போக்கிரி படத்தில் இடம்பெற்ற ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்கமாட்டேன் என்ற டயலாக்குகள் குறித்து பேசியிருக்கிறார்.

சரவெடி டயலாக்ஸ்

சரவெடி டயலாக்ஸ்

விஜயின் இந்த புகழ்பெற்ற டயலாக்குகள் அவரது பர்சனர்ல் வாழ்க்கையிலும் தொடர்புடையது. மேலும் பேச்சு மாட்டும்தான்டி சைலன்ட்டா இருக்கும்.. அடில்லாம் சரவெடியா இருக்கும்.. என்ற டயலாக்கு குறித்தும் பேசியிருக்கிறார் அஷ்வின்.

வெறித்தனமா இருக்கும்

வெறித்தனமா இருக்கும்

இதேபோல் பிகில் படத்தில் விஜய் பேசும் டயலாக்கான நாங்களும் பிளேயர்தான் சார்.. எங்களுக்கு ஃபுட்பால்லாம் தெரியாது.. ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என்ற டயலாக் கொல மாஸாக இருக்கும் என்றும் புகழ்ந்துள்ளார். இதேபோல் பிகில் படத்தில் விஜய் பேசும் டயலாக்கான நாங்களும் பிளேயர்தான் சார்.. எங்களுக்கு ஃபுட்பால்லாம் தெரியாது.. ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என்ற டயலாக் கொல மாஸாக இருக்கும் என்றும் புகழ்ந்துள்ளார்.

ஆல் இஸ் வெல்

ஆல் இஸ் வெல்

இதேபோல் டிவிஸ்ட்டோடு த்ரில்லாக செல்லும் படமான போக்கிரி படத்தில் இடம்பெற்ற நீ பொழப்புக்கு ரவுடி.. நான் பொறந்துலேருந்தே ரவுடி.. நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் என்ற டயலாக் பெற்ற வரவேற்பு குறித்தும் விளக்கி கூறியிருக்கிறார். தொடர்ந்து நண்பன் படத்தில் விஜய் பேசும் ஆல் இஸ் வெல்.. என்ற பஞ்ச் டயலாக்கும், அதற்கு அவர் அளிக்கும் அட்டகாசமான விளக்கத்தையும் வீடியோ க்ளீப்பிங்கோடு வழங்கியிருக்கிறார் அஷ்வின்.

அழகாய் வரிசைப்படுத்தி

அழகாய் வரிசைப்படுத்தி

இதேபோல் ஆதி படத்தில் விஜய் பேசும் அதிரடி டயலாக்குகளான உனக்குள்ள இருக்குறது வலி.. எனக்குள்ள இருக்குறத வெறி.. என்ற டயலாக்கும், மானத்துக்கு மட்டும்தான் பயப்படுவேன், மரணத்துக்குலாம் பயப்பட மாட்டேன் என்ற டயலாக்குகளையும் ரீகால் செய்துள்ளார்.
மேலும் நடிகர் விஜயின் காதல் வசனங்களையும், நட்புக்கான வசனங்களையும் அழகாய் வரிசைப்படுத்தியிருக்கிறார் அஷ்வின்.

ஐ அம் வெய்ட்டிங்

ஐ அம் வெய்ட்டிங்

அதன்படி பூவே உனக்காக படத்தில் காதல் என்பது ஒரு முறைதான் வரும் என்ற டயலாக்கும், ஃபிரண்ட்ஸ் படத்தல் நட்பை பெருமைப்படுத்தி அவர் பேசும் டயலாக்கையும் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளான மெர்சல் படத்தில் கையில் புறாவை வைத்துக்கொண்டு பீஸ் புரோ என விஜய் கூறும் டயலாக் குறித்து பேசியுள்ள அஷ்வின், விஜயின ஐ அம் வெயிட்டிங் என்ற மாஸ் டயலாக்குடன் முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X