மேக்கப் போட்டு விஜய் சேதுபதியாக மாறிய இளம் பெண்.. திகைக்க வைக்கும் வீடியோ!

சென்னை: இளம் பெண் ஒருவர் மேக்கப் போட்டு விஜய் சேதுபதி போல் மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். ஹீரோ, வில்லன் என எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் பிச்சு உதறி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

கோகுலத்தில் சீதை, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, புதுப்பேட்டை, லீ ஆகிய படங்களில் அன் கிரெடிட்டட் ரோல்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி பிளேயராக நடித்தார் விஜய் சேதுபதி.

முதல் முறையாக லீடிங் ரோல்

முதல் முறையாக லீடிங் ரோல்

நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தென்மேற்கு பருவ காற்று படத்தில் முதல் முறையாக லீடிங் ரோலில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

பீஸா படத்திற்கு பெரும் பாராட்டு

பீஸா படத்திற்கு பெரும் பாராட்டு

அதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார் விஜய் சேதுபதி. பின்னர் பீஸா படத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பிரபலமானார். பீஸா படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஆரஞ்ச் மிட்டாய், நானும் ரவுடிதான், சேதுபதி, காதலும் கடந்து போகும், தர்ம துரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும்

என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும்

இதுதான் என்றில்லாமல் என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பாக செய்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கைவசம் அதிக படங்களை வைத்துள்ள நடிகராகவும் வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

 பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி

பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர், கொரோனா குமார், அன்னபெல்லா சுப்பிமணியம், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

சமையல் நிகழ்ச்சி - வெப் சீரிஸ்

சமையல் நிகழ்ச்சி - வெப் சீரிஸ்

தற்போது முன்னணி தொலைக்காட்சி சேனலில் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஃபேமிலி மேன் வெப் சிரீஸ் இயக்குநர்களின் புதிய வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

அச்சு அசலாக விஜய் சேதுபதி போல்

அச்சு அசலாக விஜய் சேதுபதி போல்

இந்நிலையில் இளம் பெண் ஒருவர் மேக்கப் போட்டு விஜய் சேதுபதியை போன்றே அச்சு அசலாக மாறியுள்ளார். அந்த பெண் மேக்கப் போடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியின் டூப் என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X