பார்வையற்ற சிறுவனுக்காக ஆன் த ஸ்பாட்டில் எஸ்பிபி எடுத்த ஆக்ஷன்.. இளம் விமர்சகர் அஷ்வின் உருக்கம்!
சென்னை: கொரோனாவால் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை உருக்கமாக கூறியிருக்கிறார் இளம் விமர்சகரான அஷ்வின்.
சினிமாவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் எஸ்பி பாலசுப்ரமணியம்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எஸ்பி பாலசுப்ரமணியம். தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இளம் விமர்சகர்
எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இளம் விமர்சகரான அஷ்வின், எஸ்பி பாலசுப்ரமணியம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

எளிமையான மனிதர்
அதில் அவர் கூறியிருப்பதாவது, பல ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலருக்கும் பக்கபலமாய் இருந்து வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம் சார். மிகவும் இயல்பான, எளிமையான மனிதர் அவர்.

பார்வையற்ற சிறுவன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சில எபிசோடுகளில் கலந்து கொண்டார். அப்போது அதில் பங்கேற்ற குழந்தைகள் பாடும் போது அப்படி ஊக்கப்படுத்தினார். அதில் என்னம்மா கண்ணு பாடலை பாடிய தனுஷ் என்ற சிறுவன் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி சிறுவன். அப்போது அவரை அப்படி ஊக்கப்படுத்தினார்.

மருத்துவரிடம் பேசி..
அந்த சிறுவன் பார்வையை பெற வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோதே உடனடியாக கண் மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினார். அந்தளவுக்கு எளிமையான ஒரு மனிதர். அந்த பையனின் பாடலை கேட்டு அட்ராக்ட் ஆகிவிட்டார் எஸ்பிபி சார். திறமைகளை ஊக்குவிப்பவர்.

இனிமையான குரல்
எஸ்பிபி சார் பாடும் ஒவ்வொரு பாடலுமே பல தலைமுறைகளுக்கு டிக்ஷனரியாக இருக்கும். பாடல் வரிகள் மற்றும் இசையையும் தாண்டி அவருடைய குரல் அவ்வளவு இனிமையானது. பல பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார். பல நடிகர்களுக்கு பாடியிருக்கிறார்.

பல மொழிகளில் பங்களிப்பு
வைரமுத்து ஒரு எமோஷனல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் முதல் பாடலை நீதான் பாடினாய், என்னுடைய கடைசி பாடலையும் நீதான் பாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். எஸ்பிபி சாரின் பங்களிப்பு தமிழ் சினிமாவையும் தாண்டி, இந்தி, தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் இருந்திருக்கு.

குரலில் எனர்ஜி
தர்பார் படத்தில் இடம்பெற்ற சும்மா கிழி.. பாடலை எஸ்பிபி சார்தான் பாடியுள்ளார். அதில் அவ்வளவு எனர்ஜிட்டிக்காக பாடியிருக்கிறார். இந்த கொரோனாவால் பல கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப் சார் குணமடைந்தது போல் எஸ்பிபி சாரும் குணமடைய வேண்டும்.

அவருக்கான பிரார்த்தனைகள்
பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதை திறந்தாலும் அவருக்கான பிரார்த்தனைகள் உள்ளன. பிரபலங்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
Recommended Video

தாயின் மடியில் படுத்து..
அவரது குரலில் எனக்கு சிவாஜி படத்தில் இடம்பெற்ற காவிரியாறும் பாடல் பிடிக்கும. தாயின் மடியில் படுத்து தூங்குவது போன்ற ஒரு உணர்வை தரும்.. என்னுடைய 7 வயதில் அந்த பாடலை மெய்மறந்து ரசிக்க தொடங்கினேன்.. எஸ்பிபி சாரின் பாடல்கள் தாயிடம் தாய்ப்பால் குடிக்கும் சுகத்தை கொடுத்தது.

காதல் ரோஜாவே..
அடுத்து சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற தேவுடா.. தேவுடா.. பாடல். ஓபனிங் பாடல் என்று மட்டுமில்லாமல் மண்வாசனையும் இருக்கும்.. அடுத்து ரோஜா படத்தில் இடம்பெற்ற காதல் ரோஜாவே பாடல் எனக்கு பிடிக்கும். அந்தப் பாடலை மீண்டும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. வைரமுத்து தனது வீடியோவில் கடைசியாக எஸ்பிபி சாருக்காக இந்தப் பாடலைதான் பாடினார்.

மெஸ்மரைஸிங் குரல்
எஸ்பிபி சார் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் என பல விருதுகளை பெற்றுள்ளார். எந்த விருதையும் அவர் தேடி செல்லவில்லை. அனைத்து விருதுகளும் அவரைதான் தேடி வந்துள்ளது. அருமையான மனிதர்.. ஒரு குழந்தை தனது பெற்றோருக்கு பிறகு இசையை ரசிக்க தொடங்கினால் இளையராஜாவை ரசிக்கும்.. அதன்பிறகு எஸ்பிபி சாரைதான் ரசிக்கும்.. அப்படி ஒரு மெஸ்மரைஸிங் குரல் அவருக்கு.
இரண்டாவது இன்னிங்ஸ்
எஸ்பி பாலசுப்ரமணியம் பல படங்களிலும் நடித்துள்ளார். காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார். சாய் பாபா படத்தில் சாய் பாபா பக்தராக நடித்திருப்பார். எஸ்பி சார் நிச்சயம் மீண்டு வருவார்.. அவரது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிப்பார்.. இந்த வீடியோ மூலமாக அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி கொள்கிறேன்.. இவ்வாறு இளம் விமர்சகரான அஷ்வின் தனது யூ ட்யூப் சேனலில் ஷேர் செய்துள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











