ஆபாச மெஸேஜ்.. பாலியல் தொல்லை.. போலீஸில் புகார் அளித்த நடிகை.. இளைஞரை தூக்கிய போலீஸ்!

மும்பை: பிரபல வங்க மொழி நடிகையை ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்காள மொழி படங்களில் நடித்த பிரபல நடிகை அருணிமா கோஷ். இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் முகேஷ் மயுக் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் நடிகை அருணிமாவை டிவிட்டர் பக்கத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

ஆபாச கருத்து

ஆபாச கருத்து

அந்த இளைஞர் கடந்த 2 மாதங்களாக அருணிமாவின் டிவிட்டர் பக்கத்தில் அவர் குறித்து ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

மேலும் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். நடிகை அருணிமா எங்கே செல்கிறார், என்ன செய்கிறார் என்பது உட்பட ஒவ்வொரு அசைவையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

போலீஸ் புகார்

போலீஸ் புகார்

முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தார் நடிகை அருணிமா கோஷ். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த நபரின் டார்ச்சர் அதிகரிக்கவே பொறுத்துக்கொள்ள முடியாத அருணிமா போலீஸில் புகார் அளித்தார்.

தெற்கு கல்கத்தா

தெற்கு கல்கத்தா

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த நபரை பிடித்தனர். நடிகை அருணிமாவுக்கு தொல்லை கொடுத்த நபர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கர்பா பகுதியை சேர்ந்த முகேஷ் ஷா என்பது தெரியவந்துள்ளது.

இளைஞர் கைது

இளைஞர் கைது

போலி பெயரில் நடிகையை பின்தொடர்ந்து ஆபாச கருத்துக்களையும் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X