விடிய விடிய டார்ச்சர்.. நிர்வாணமாக்கி பார்த்து ரசித்த பிரபலம்.. கதறும் இளைஞர்!

சென்னை: ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகளும் அடுத்தடுத்து புகார்களை கூறி வரும் நிலையில், இளைஞர் ஒருவ்ர், இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதனால், என்னத்தான் நடக்கிறது மலையாள சினிமாவில் என ஒட்டுமொத்த பார்வையும் அங்கு திரும்பி உள்ளது.

ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைக்கப்படுவதாகவும், இதற்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஓரம்கட்டப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. மேலும், நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் குடித்துவிட்டு கதவை தட்டி அழைக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பல நடிகைகள் தானாக முன்வந்து புகார் அளித்தனர்.

hema commission mohanlal ranjit

இயக்குநர் மீது புகார்: இதைத்தொடர்ந்து, கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குநர் ரஞ்சித் மீதும் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா புகார் அளித்திருந்தார். அதில், சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படத்தில் நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் அன்று இரவே கொல்கத்தா திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் கேரளா திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

நிர்வாணமாக்கி ரசித்தார்: இந்த நிலையில், கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஞ்சித் மீது பாலியல் ரீதியாக புகார் கொடுத்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் அளித்த புகாரில், 2012ம் ஆண்டு மம்முட்டி நடித்த 'பவுட்டியுடே நாமத்தில்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.

அப்போது தான் நான் இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தேன். அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு இயக்குனர் ரஞ்சித்தை அணுகினேன். அதன்பின் அவர், பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு என்னை அழைத்து, எனக்கு மது கொடுத்து, என் ஆடைகளை களையவைத்து என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

மிரட்டுகின்றனர்: அதுமட்டுமில்லாமல், தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அதை அவரின் பெண் தோழியான நடிகைக்கு அனுப்பி ரசித்தார் என்று அந்த இளைஞர் பகீர் புகார் ஒன்றை கூறியுள்ளார். மேலும், தான் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு பலர் தன்னை போனில் மிரட்டி வருவதாகவும், ஆனால், தன்னுடைய புகாரில் உறுதியாக இருப்பதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இயக்குநர் ரஞ்சித் மீது ஏற்கனவே ஒரு நடிகை புகார் கூறியிருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது வழக்கை கோழிக்கோடு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

மோகன்லால் பதில்: இந்த இளைஞர் கூறியிருக்கும் புகாரால் கேரள சினிமாவில் நடிகைகளுக்கு மட்டுமில்லை நடிகர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. தொடர்ந்து நடிகைகளிடம் இருந்து வரும் புகாரால், மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உட்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இந்த விஷயத்தில் இத்தனை நாட்கள் மௌனம் காத்து வந்த, நடிகர் மோகன்லால், நான் எங்கும் ஓடிப்போகவில்லை. எனது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நான் கேரளாவில் இல்லை. உங்கள் அனைவருக்கும் என்னை பல ஆண்டுகளாக தெரியும். பிறகு எப்படி ஒரே நாளில் நான் அந்நியமாக மாறினேன். அனைத்து குற்றச்சாட்டுகளும் தேவையில்லாமல் எங்களை நோக்கி வருகின்றன. அதை நிறுத்திவிட்டு மலையாள சினிமாவை காப்பாற்றுவோம் என்று பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X