ஆடாம ஜெயிச்சோமடா வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக் குழுவினர்!

By Shankar

கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து வெளிவந்த ‘ஆடாம ஜெயிச்சோமடா' படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடினர் படக்குழுவினர்.

வீராப்பு, தில்லு முல்லு போன்ற படங்களை இயக்கிய பத்ரி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில கருணாகரன், விஜயலட்சுமி, சிம்ஹா, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பி.மதுசூதனன் இப்படத்தை தயாரித்திருந்தார்.

மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா

இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருந்தவர் மிர்ச்சி சிவா. ஆனால் படத்தில் அவர் நடிக்கவில்லை (நிச்சயம் இதற்காக இப்போது வருந்தியிருப்பார்!)

வெற்றி

வெற்றி

இப்படம் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. படம் குறித்த வாய்மொழி பேச்சு நன்றாக இருப்பதால், வார நாட்களிலும் நல்ல கூட்டத்துடன் படம் ஓடுகிறது.

கேக் வெட்டி

கேக் வெட்டி

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இந்த திரைப்படத்தில் பங்கு பெற்ற நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுடன், திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டு சென்னையில் கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினர்.

ரசிகர்களைச் சந்தித்து

ரசிகர்களைச் சந்தித்து

இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய ரசிகர்களைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக, திரைப்படக் குழுவினர், நடிகர், நடிகையர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு நேரடியாகச் செல்லவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X