ஜில் ஜில் ரமாமணி… ஆச்சி மனோரமாவின் நினைவு தினம் இன்று !

சென்னை : சென்னை : ஆச்சி மனோரமாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Recommended Video

CHUBBY யாதான் சாதிச்சோம் | REWIND RAJA EP-03 | FILMIBEAT TAMIL

4 தலைமுறை நடிகர்களுடன் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள மனோரமா, 5 முதலமைச்சர்களுடன் நடித்தவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

காமெடி, குணச்சித்திரம் என ஆயிரம் படங்களுக்குமேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மனோரமா. அவர் நடித்த காலகட்டத்தில் இவர் இல்லாத படங்கள் மிகமிகக்குறைவு என்றே சொல்லக்கூடிய அளவுக்கு தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தார்

ஆச்சி மனோரமா

ஆச்சி மனோரமா

ஆச்சி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஆச்சி மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் 1937ம் ஆண்டு காசியப்பன் கிளாக்குடையார் மற்றும் ராமாமிர்தம் ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.

மனோரமா

மனோரமா

மானோரமாவின் நாடக நடிப்பை பார்த்து வியந்த, நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர். இதையடுத்து, மணிமகுடம், தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

1958ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம் இவருக்கு திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்தது. கதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்ட மானோரமா கொஞ்சும் குமரியில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, அலங்காரி, அதிசயபிறவி, பெரிய மனிதன் என மொத்தம் நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார் மனோரமா, நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர் மனோரமா.

பாடகி

பாடகி

இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாமல், ஏராளமான பாடல்களையும் இவர் பாடி உள்ளார். மகளே உன் சமத்து என்ற படத்தில் முதல் முதலாக பாடலை பாடினார். சோவுடன் இணைந்து இவர் பாடிய வா வாத்தியாரே ஊட்டாண்ட பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாதே மற்றும் மெட்ராசை சுத்தி பாக்க போறேன் போன்ற ஹிட் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

பல விருதுகள்

பல விருதுகள்

பத்ம ஸ்ரீ, புதிய பாதை படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்ற ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். மேலும், 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் மனோரமா.

6ம் ஆண்டு நினைவு தினம்

6ம் ஆண்டு நினைவு தினம்

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அசால்ட் செய்யும் மனோரமா 2015ம் ஆண்டு அக்டோபர் 10ந் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இவரின் 6வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X