ரித்விகாவுக்கும் தடுப்பூசி போட்டாச்சு.. எம்புட்டு பயம் பாருங்க கண்ணுல!
சென்னை : நடிகை ரித்விகா இன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Recommended Video
தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் Covid-19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் புகைப்படங்களை வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
கமல்ஹாசன், ரஜினி காந்த், அருண்விஜய், ராதிகா, குஷ்பூ, ரம்யாபாண்டியன், சிம்ரன், காஜல் அகர்வால் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

பாதிப்பு குறைந்து வருகிறது
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலையின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டி மக்களை கதி கலங்க வைத்தது. எனினும், ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக தொற்று பரவல் குறைந்து வருகிறது.

468 பேர் பலி
தமிழகத்தின் நேற்றைய பாதிப்பு 34,285 இருந்தது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக 468 பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி அவசியம்
கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியின் அவசியம் குறித்து தமிழக அரசு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. மேலும் திரைப்பிரபலங்களும் தடுப்பூசி போட்டுகொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி போட்டாச்சு
அந்த வகையில் நடிகை ரித்விகா கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை ரித்விகா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான பரதேசி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். இதையடுத்து மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்தியின் நண்பனின் மனைவியாக நடித்திருந்தார். கதாநாயகியாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இல்லத்தரசிகளின் மனங்களை வென்றார் ரித்விகா.


Click it and Unblock the Notifications











