Aadai என்னம்மா அமலா பால், மறுபடியும் 'ஆடை'யில்லா புகைப்படமா?
சென்னை: அமலா பால் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பற்றி தான் நெட்டிசன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் வித்தியாசமாக நடித்துள்ள ஆடை படம் வரும் ஜூலை மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக வெளியான டீஸரில் அமலா பால் பிறந்தமேனியாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் அமலா பால் ட்விட்டரில் புதிய அறிவிப்பு ஒன்றை ஆடையில்லா புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதாவது, ஆடை படத்தில் வரும் நீ வானவில்லா பாடலின் 3டி லிரிக்கல் வீடியோ நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார் அமலா பால்.
அந்த அறிவிப்புக்கான புகைப்படத்தில் அமலா ஆடையில்லாமல் முதுகை காட்டிக் கொண்டு ரத்தக் கடலில் நிற்கிறார். அவரின் ட்வீட்டை பார்த்தவர்களோ, என்னம்மா அமலா, படத்திற்கு ஆடை என்று பெயர் வைத்துவிட்டு இப்படி ஆடையே இல்லாமல் வருகிறீர்களே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
டீஸரில் வெளியான காட்சிக்கு இந்த புகைப்படம் எவ்வளவோ மேல். படத்தில் அமலா பால் ஆடையில்லாமல் வரும் நேரம் மிகவும் குறைவு என்கிறார்கள். இந்நிலையில் அந்த குறைவான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ ஆகியவை தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிறந்தமேனியாக நடித்ததற்காக தன்னை பலரும் கேவலமாக பேசுவது அமலா பாலுக்கு தெரியாமல் இல்லை. இப்படி எல்லாம் பேசுவார்கள் என்பது அவருக்கு ஏற்கனவே தெரியும். கதைக்கு தேவைப்பட்டதால் அவர் ஆடையில்லாமல் நடித்துள்ளார். அதனால் திட்டுபவர்கள் திட்டட்டும் என்று அவர் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எத்தனை நாட்களுக்கு திட்டுவீர்கள். அடுத்து ஏதாவது பிரச்சனை வந்தால் இந்த நெட்டிசன்கள் மறந்துவிடுவார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். முன்னதாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவும் ஆடையில்லாமல் டாய்லெட் பேப்பரை சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.
ஆடை படத்திற்கு தனியாக விளம்பரம் தேடத் தேவையில்லை. டீஸர், போஸ்டர்களே போதும். மக்கள் அமலா பாலை திட்டினாலும் படத்தை பற்றி அதிகம் பேசுகிறார்கள். அதனால் சமூக வலைதளங்களில் ஆடை தொடர்பான விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இது படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறலாம்.


Click it and Unblock the Notifications











