Aadai விஜே ரம்யாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த அமலா பால்: வைரல் காட்சி

By Siva

சென்னை: ஆடை படத்தில் அமலா பால், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி தற்போது வைரலாகியுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் துணிச்சலாக நடித்துள்ள ஆடை படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. அமலா பால் ஏன் நிர்வாணமாக நடித்தார் என்பதை தெரிந்து கொள்வதற்காக படத்தை பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆடை பட ட்ரெய்லரில் வந்த ஒரு காட்சி தற்போது வைரலாகியுள்ளது.

ஆடை

ஆடை பட ட்ரெய்லரை பார்த்தாலே அமலா பாலுக்கு பெட் கட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பெட் கட்டி ஜெயிக்க எது வேண்டுமானாலும் செய்வார் போன்று. இந்நிலையில் ஆடை ட்ரெய்லரில் அமலா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ரம்யாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி தற்போது வைரலாகியுள்ளது.

ரம்யா

ரம்யா

அமலா பால் முத்தம் கொடுக்கும் வேகத்தை பார்த்தால் இதுவும் பெட்டுக்காக செய்தது போன்று தெரிகிறது. அமலா பால் துணிந்து நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் குடும்ப குத்துவிளக்கு போன்று காட்சியளிக்கும் ரம்யா இப்படி ஒரு காட்சியில் நடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் நடித்திருப்பார்.

உண்மை

உண்மை

அமலா பாலும், ரம்யாவும் ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருக்கலாம் என்ற பேச்சு கிளம்பாமல் இல்லை. ஆனால் அமலா பெட் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தால் இதுவும் பெட்டில் ஜெயிக்க செய்த காரியமாகத் தான் இருக்கும். எது எப்படியோ, படத்தை பார்த்தால் உண்மை தெரிந்துவிடப் போகிறது. ஆடை பட ட்ரெய்லரை பார்த்த திரையுலக பிரபலங்கள் அமலா பாலை வாழ்த்தியுள்ளனர். தன்னை மனதார வாழ்த்தியவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

போஸ்டர்

போஸ்டர்

ஆடை படத்திற்கு தனியாக காசு செலவு செய்து விளம்பரம் செய்யத் தேவையில்லை. மேலும் இலவச விளம்பரமும் இந்த படத்திற்கு தேவையில்லை. அமலா பாலின் சர்ச்சை காட்சி ஒன்றே படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அமலா, ரம்யா லிப் டூ லிப் காட்சி வேறு கூடுதல் விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X