பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்... அடம் பிடிக்கும் அமலா பால்.. எல்லாம் ‘ஆடை’யில்லாமல் நடித்த எபெக்ட்!

ஆடை திரைப்படம் மூலம் தனக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை அமலா பால்.

சென்னை: ஆடை திரைப்படம் அமலா பாலின் சினிமா வாழ்க்கையை மாற்றியுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்தப் படம் ஆடை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அமலா பால் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அமலா பால் இந்த படத்தில் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சிகளுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரவில்லை. காரணம் அந்த காட்சிகளை மிக நேர்த்தியாக, விரசமில்லாமல் காட்டியதே.

விருது கனவு:

விருது கனவு:

ஆடை திரைப்படம் தனக்கு நல்ல பெயரை பெற்று தந்திருப்பதாக உணர்கிறார் அமலா பால். மேலும், ஆடை திரைப்படத்திற்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என அவரிடம் பலரும் கூறி வருகின்றனர். அதனால் விருது வாங்கும் கனவில் மிதந்து வருகிறார் அமலா பால்.

அதிரடி முடிவு:

அதிரடி முடிவு:

எனவே தனது அடுத்தப்படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறாராம். சமீபத்தில் சில இயக்குனர்கள் அமலா பாலை சந்தித்து கதை சொல்லியிருக்கின்றனர். ஆனால் எதற்கும் அவர் ஓகே சொல்லவில்லையாம். நடித்தால் நல்ல படத்தில் நடிக்கலாம், இல்லை என்றால் நடிக்கவே வேண்டாம் எனும் முடிவில் அமலா இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாயகி:

நாயகி:

ஆடை படத்தில் ஆடையில்லாமல் துணிச்சலாக நடித்த அமலாபாலைப் பார்த்து இயக்குநர்களும் மிரண்டு தான் போயுள்ளனர். எனவே, நயன்தாரா, ஜோதிகா போன்றோருக்கு உருவாக்குவது போல், நாயகியை மையப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து அவரை சந்தித்து வருகின்றனராம். ஆனால் அவற்றில் ஒரு கதைகூட அமலாபாலை இதுவரை திருப்தி செய்யவில்லையாம்.

காதலருடன் ஆலோசனை:

காதலருடன் ஆலோசனை:

அமலா பால் தற்போது பாண்டிச்சேரியில் காதலருடன் வசித்து வருகிறார். ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அவரே அதனை ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே காதலருடன் கலந்தாலோசித்த பிறகே அடுத்தப்படம் குறித்து அவர் முடிவு செய்வார் என தெரிகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

விஜய் சேதுபதி படம் கைநழுவிப் போன நிலையில், அமலா பாலின் கைவசம் 'அதோ அந்த பறவை போல' திரைப்படம் மட்டுமே உள்ளது. ஆடை படத்தை போல் இந்த படத்தையும் அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். அதேபோல் அமலா பாலிடம் இருந்து ரசிகர்களும் போல்டான படங்களை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X