twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதி தான் வின்னர்… ஆடை பட இயக்குநரின் அதிரடி ட்வீட்!

    தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள கார்த்தியின் கைதி படம் வெற்றி படம் என்று ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    |

    Recommended Video

    Kaithi Movie | பிகிலுக்கு போட்டியான கைதி சிறந்த தமிழ் படம் - குவியும் பாராட்டு

    சென்னை: விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய இரு படங்களும் இன்று திட்டமிட்டபடி அதிகாலையிலே வெளியாகின.

    விஜய்யின் பிகில் திரைப்படம் மாஸ் என்டர்டெயினர் படம் என்று விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிகிலுக்கு போட்டியாக வெளியாகியுள்ள கைதி படம் சிறந்த தமிழ் படம் என்ற பாராட்டுக்களை தட்டிச் சென்றுள்ளது.

    டிரெண்டிங் கிங்.. இந்தியளவில் டிரெண்டாகும் பிகில் ஹேஷ்டேகுகள்!டிரெண்டிங் கிங்.. இந்தியளவில் டிரெண்டாகும் பிகில் ஹேஷ்டேகுகள்!

    யாருக்கு மாஸ்

    யாருக்கு மாஸ்

    மாஸ் என்கிற ரீதியில் பார்த்தால், பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள விஜய்யின் பிகில் தான் இந்த தீபாவளிக்கு மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதை, திரைக்கதை டெக்னிக்கலான படம் என்று பார்த்தால், கார்த்தியின் கைதி பிகிலை ஓவர்டேக் செய்துள்ளதாகவே தெரிகிறது.

    மிரட்டல் நடிப்பு

    மிரட்டல் நடிப்பு

    கைதியில் டில்லி கதாபாத்திரத்தில் ஆயுள் கைதியாக நடித்திருக்கும் கார்த்தி, தனக்கே உரித்தான நக்கல், நைய்யாண்டி, ஆக்‌ஷன் என ஒன் மேன் ஆர்மியாக கைதி படத்தை தாங்கியுள்ளார். இரவு நேரங்களில் மட்டுமே படத்தின் ஷூட்டிங் இருந்தாலும், நடிகர் கார்த்தி கொஞ்சம் கூட சோர்வடையாமல் நடித்திருப்பது திரையில் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

    62 இரவுகள்

    62 இரவுகள்

    மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கார்த்தியின் கைதி திரைப்படத்தை 62 இரவுகளில் படமாக்கியுள்ளார். ஒரே இரவில் படத்தின் கதை நகர்வதால், நிறைய சவால்களை சந்தித்து கைதி படத்தை உருவாக்கியுள்ளார். திரைக்கதையில் வரும் ஒவ்வொரு டீட்டெய்லிங்கும் கைதி படக்குழுவின் உழைப்பையும் நேர்மையையும் பறைசாற்றுகின்றன.

    சென்டிமென்ட் இருக்கா?

    சென்டிமென்ட் இருக்கா?

    என்னதான் கைதி ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், மறுநாள் காலையில் மகளை பார்த்துவிடுவோமா மாட்டோமா என ஏங்கும் காட்சிகளில் ரசிகர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் கார்த்தி. பிகில் திரைப்படத்திலும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்துள்ள நிலையில், இந்த தீபாவளிக்கு பிகில், கைதி என எந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தாலும், ரசிகர்கள் ஆனந்த கண்ணீருடன் வெளியே வருவது நிச்சயம்.

    பப்ஜி ஸ்டைலில்

    கார்த்தியின் கைதி படத்தை பார்த்த ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், பப்ஜி ஸ்டைலில், வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் என அதிரடியாக ட்வீட் போட்டுள்ளார். ஆடை படத்தின் ஒளிப்பதிவாளரான விஜய் கார்த்திக் கண்ணன், கைதி படம் இந்த தீபாவளிக்கு சரவெடி என்றும் தியேட்டரில் சென்று பார்க்க மறந்துவிடாதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் தான் ரத்னகுமார் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் என ட்வீட் போட்டுள்ளார். இவரது இந்த ட்வீட் விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

    English summary
    Aadai movie director Rathnakumar and aadai movie cinematographer vijay karthik kannan tweets Karthi's Kaithi is a Diwali winner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X