ஆன்மீகத்தை தேடிச்செல்லும் ஆடை பட இயக்குனர்!
சென்னை : வைபவ்,பிரியா பவானி சங்கர், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தை இயக்கியவர் இயக்குனர் ரத்னகுமார்.
எதையும் வித்தியாசமாக செய்யும் நடிகை அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
விஜய்யின் மாஸ்டர் படத்திலும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி உள்ள ரத்னகுமார் இப்பொழுது தீவிர ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

மேயாத மான் அறிமுக படமாக அமைந்தது
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக களமிறங்கியுள்ள ரத்னகுமார் மேயாதமான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். வைபவ்,பிரியா பவானி சங்கர், இந்துஜா ரவிசந்திரன், விவேக் பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம் ரத்ன குமாருக்கு மிகப்பெரிய அறிமுக திரைப்படமாக அமைந்தது.

அமலா பால் ஆடை இல்லாமல் நடித்த
இந்த நிலையில் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கினார். எதையும் வித்தியாசமாக செய்யும் நடிகை அமலாபால் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் அமலா பால் ஆடை இல்லாமல் நடித்த ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் இந்த படம் பெருமளவு ரசிகர்களால் பாராட்டுகளைப் பெற்றது. யாரும் யோசிக்காத வித்தியாசமான கோணத்தில் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுமையான கதை களத்தில் வெளியான ஆடை படத்தை இயக்கியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரத்னகுமார்.

திரைக்கதை ஆசிரியராக
அதைத்தொடர்ந்து விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் பணியாற்றி உள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூலை அள்ளிய மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராக ரத்னகுமார் பணியாற்றியுள்ளார்.

ஆன்மிக பயணம் மேற்கொண்ட
இவ்வாறு தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ள ரத்னகுமார் அடுத்ததாக முன்னணி இயக்குனர் ஒருவரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆன்மிகத்தை தேடிச்செல்லும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக ஆகிறது. ஆன்மீகத்தின் மீதும் கடவுளின் மீதும் மிகுந்த பற்று கொண்ட ரத்னகுமார் வெள்ளியங்கிரி மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு கடவுளை தரிசித்தவாறு நடைபயணம் மேற்கொண்ட ஆன்மீக புகைப்படத்தை இப்பொழுது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











