அமலா பால் பப்பி ஷேமாக நடித்த ஆடை படம்.. ரிலீஸ் குறித்து இயக்குநர் முக்கிய தகவல்!
Recommended Video
சென்னை: ஆடை படம் ரிலீஸ் குறித்து இயக்குநர் ரத்னகுமார் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ரத்ன குமார் அமலா பாலை வைத்து இயக்கியுள்ள படம் ஆடை. இந்த படத்தில் சில காட்சிகளில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல மில்லியன் வியூஸ்களை அள்ளி சாதனை படைத்தது.

19ஆம் தேதி ரிலீஸ்
இந்நிலையில் அண்மையில் வெளியான ட்ரெயிலரும் பெரும் வரவேற்பை பெற்றது. ஆடை படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ரத்னகுமார் தகவல்
படத்தின் டீசரும் ட்ரெயிலரும் த்ரில்லாக இருப்பதால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை இயக்குநர் ரத்னகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டீசர், ட்ரெயிலர்
அதாவது, ஆடை படத்தின் டீசருக்கு 10 மில்லியன் வியூஸ் கிடைத்திருப்பதாகவும் ட்ரெயிலருக்கு 4 மில்லியன் வியூஸ் கிடைத்திருப்பதாகவும் ரத்னகுமார் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ரிலீஸ்
மேலும் ஆடை படம் உலகம் முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறியுள்ளார். அன்பு, வெறுப்பு, சந்தேகம் மற்றும் அமைதிக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என்றும் இயக்குநர் ரத்னகுமார் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











