நிர்வாணமா நடிச்சதாலே என்ன நீக்கிட்டாங்க.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அமலா பால் உருக்கம்!

Recommended Video

Actress Amala paul : விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட அமலா பால்- வீடியோ

சென்னை: விஜய்சேதுபதி படத்தில் இருந்து நடிகை அமலா பால் நீக்கப்பட்டுள்ளார். இதனால் தான் மிகுந்த மன வேதனை அடைந்திருப்பதாக அமலா பால் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவரின் இயல்பான நடிப்பும் மனிதாபிமானமும் மக்களுக்கு அவர் மத்தியில் பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது.விஜய் சேதுபதி பெரும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது 33-வது படம் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ளது.

இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக அமலா பால் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து நடிகை அமலா பால் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வாயிலாக மிகவும் உருக்கமா

நீக்கிவிட்டதாக மெசேஜ்

நீக்கிவிட்டதாக மெசேஜ்

நான் மிகுந்த மன வருத்தத்துடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நானாக இந்தப்படத்தில் இருந்து வெளியேறவில்லை. இந்தப்படத்தைத் தயாரிக்கும் சந்திரா ஆர்ட்ஸ், அவர்களுடைய நிபந்தனைகள் என்னுடன் ஒத்துப்போகவில்லை எனக் கூறி என்னை நீக்கிவிட்டதாக மெஸேஜ் செய்திருக்கிறனர்.

சம்பளத்தை கூட கேட்கவில்லை

சம்பளத்தை கூட கேட்கவில்லை

இது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. எனது இத்தனை வருட திரைத்துறை அனுபவத்தில் நான் ஒரு போதும் தயாரிப்பாளருக்கு சங்கடத்தைக் கொடுத்ததே இல்லை. பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் அவரிடம் மீதி சம்பளத்தைக்கூட தான் கேட்கவில்லை.

கிராமத்தில் தங்கியிருந்தேன்

கிராமத்தில் தங்கியிருந்தேன்

அதோ அந்த பறவை போலே படத்தின் ஷுட்டிங்கின் போது கூட தான் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் தான் தங்கியிருந்தேன். சிறிய பட்ஜெட் படம் என்பதால் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் நகர்புற ஹோட்டலில் தங்காமல் கிராமத்திலேயே தங்கி படத்தில் நடித்தேன்.

ஆடை படத்தில் கூட..

ஆடை படத்தில் கூட..

லிக்மென்ட் டியரால் பாதிக்கப்பட்டபோது கூட 5 மணி நேரம் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தேன். ஆடை படத்தில் கூட மிகக்குறைவான சம்பளமும் படம் ரிலீஸாகி வரும் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு ஷேர் பெற்றுக்கொள்வதாக கூறிதான் நடித்துக்கொடுத்தேன்.

பேசவே இல்லை

பேசவே இல்லை

தற்போது விஜய்சேதுபதி33 படத்திற்கு ஆடைகள் வாங்க மும்பை வந்திருக்கிறேன். இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து என்னை இந்தப்படத்தில் இருந்து நீக்குவதாகக் கூறியிருக்கிறார்கள். என்னிடம் இது சம்பந்தமாக ஒருவார்த்தைக் கூட பேசவில்லை.

ஆடை டீசர் வந்தபிறகுதான்

ஆடை டீசர் வந்தபிறகுதான்

ஆடை டீசர் வந்தபிறகுதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. என்னைப் பற்றி திரைத்துறையில் பரப்படும் தவறான வதந்திகளை வைத்துக்கொண்டு இந்த முடிவினை தயாரிப்பாளர் எடுத்திருப்பது கவலை அளிக்கிறது.

மாறினால்தான் வளரும்

மாறினால்தான் வளரும்

தமிழ் சினிமாத்துறை மிகவும் நல்ல படங்களை தருகிறது. இதுபோன்று யோசிப்பவர்களின் சிந்தனை மாறினால்தான் தமிழ் மேலும் சினிமா வளரும்.

ஏமாற்றத்தில் இருக்கிறேன்

ஏமாற்றத்தில் இருக்கிறேன்

இந்த விஷயத்தினால் எனக்கு விஜய்சேதுபதி மீது எந்த வருத்தமும் இல்லை. இந்த அறிக்கை நான் தயாரிப்பாளர் மீது மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்க வெளியிட்ட அறிக்கையாகும்.

அமலாபால் உருக்கம்

விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையான நான் அவரது படத்தில் நடிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு நடிகை அமலா பால் தனது அறிக்கையில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X