பிறக்கும்போது ட்ரஸோடவா பிறந்தோம்.. கையில தம்.. வாய திறந்தா பெட்.. இதான் ஆடை படத்தில் அமலா பால்!
சென்னை: அமலா பால் நிர்வாணமாக நடிக்கும் ஆடை படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகும் படம் ஆடை. இந்த படத்தின் சில காட்சிகளில் அமலா பால் நிர்வாணமாக நடிக்கிறார்.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. டீசர் வெளியான சில மணி நேரத்திலேயே பல மில்லியன் வியூஸ்களை அள்ளியது.
பெட் கட்றீயா?
இந்நிலையில் ஆடை படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. அதில் அம்மா, நண்பர்கள் என எல்லோரிடம் பெட் கட்றீயா என கேட்கிறார். அதற்கு அவரது அம்மா எல்லாத்துக்கும் பெட் கட்டாதே அதுவே போதையாகிடும் என்கிறார்.

எல்லா டிரஸையும் கழட்டிட்டா
பின்னர் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து உயரமான கட்டடத்தில் அமர்ந்து தண்ணி தம் என இருக்கிறார் அமலா பால். அப்போது தம் அடித்துக்கொண்டே நாமெல்லாம் பிறக்கும் போது டிரஸோடவா பிறந்தோம், எல்லா டிரஸையும் கழட்டிட்டா நம்ம உடம்புதான் ஆக்ட்சுவல் பாடி என கூறுகிறார் அமலாபால்.

பெட் கட்டும் கேரக்டர்
படத்தின் ட்ரெயிலரின்படி பெட் கட்டும் கேரக்டராக நடித்துள்ளார் அமலாபால். இந்த படத்தை வீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

வரும் 19ஆம் தேதி ரிலீஸ்
இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப்படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











