twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது ‘ஆடை’யும் உங்களுடைய கதையா.. உண்மையிலேயே இது தான் ‘அயோக்கியத்தனம்’ பார்த்திபன் சார்!

    ‘ஆடை’ தன்னுடைய குடைக்குள் மழை படத்தின் கதை என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    Aadai Public review | Aadai Review

    சென்னை: அமலாபால் நடித்துள்ள ஆடை தன்னுடைய படத்தின் கதை எனக் கூறி இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    மேயாதமான் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. நாயகியை மையப்படுத்திய கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம் கடந்த வெள்ளியன்று ரிலீசானது. இதில், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அமலாபால் இப்படத்தில் ஆடையில்லாமல் நடித்துள்ளது ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியது. பணப்பிரச்சினை காரணமாக சொன்னபடி வெள்ளியன்று காலையில் ரிலீசாக முடியாமல், மாலையில் தான் படம் ரிலீசானது.

    ப்ரியா பவானி சங்கர் காட்டில் மழை தான்: முதலில் கமல், இப்போ விக்ரம் ப்ரியா பவானி சங்கர் காட்டில் மழை தான்: முதலில் கமல், இப்போ விக்ரம்

    பாராட்டு:

    பாராட்டு:

    இப்படியாக பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டித்தான் ஆடை படம் கடந்த வாரம் ரிலீசானது. அமலாபாலே நேரடியாக தலையிட்டு தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து, படத்தை ரிலீஸ் செய்ய வைத்துள்ளார். படத்திற்கு மக்களிடையே நல்ல விதமான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. மேலும் அமலாபாலின் துணிச்சலான நடிப்பையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

    என் கதை:

    இந்நிலையில், ஆடை படத்தின் கதைக்கருவும், தனது குடைக்குள் மழை படத்தின் கதைக்கருவும் ஒன்றுதான் என டிவீட் வெளியிட்டுள்ளார் இயக்குநர் பார்த்திபன். அந்த டிவீட்டில் அவர், ‘ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது. வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 வருடங்களுக்கு பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும், (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது" என்று கூறியுள்ளார்.

    அயோக்யத்தனம்:

    அயோக்யத்தனம்:

    இதற்கு முன்னர் இதே போல், அயோக்யா படம் வெளியான சமயத்திலும், அந்தப் படம் தன்னுடைய உள்ளே வெளியே படத்தின் காப்பி என்றும், இவ்வாறு காப்பியடிப்பது அயோக்கியத்தனம் என்றும் டிவீட் வெளியிட்டிருந்தார் பார்த்திபன். பின்னர் அது ஒரு விளம்பர யுத்தி என அவரே விளக்கமும் அளித்திருந்தார். இதுவும் அதே போல் விளம்பர யுக்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    சந்தோஷமான சுமைகள்:

    இப்படியாக மற்றவர்கள் படங்களை தன்னுடைய படத்தின் காப்பி என பார்த்திபன் கூறி வருவதை ஜாலியாக அவர் பாணியிலேயே கலாய்த்திருக்கிறார் இந்த ரசிகர். அதில் அவர், ‘முன்பு உள்ளே வெளியே அடுத்தது குடைக்குள் மழை..... எப்படியோ யாராவது மூலமாக ஏலேஏலோ வந்தால் நிச்சயம் இந்த புள்ளகுட்டிகாரனுக்கு சந்தோஷமான சுமைகளாக இருக்கும்.....' எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Director, actor Parthiban tweeted that Amala Paul’s Aadai movie story is copied from his movie Kudaikul Mazhai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X