அமலா பாலிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்ட 'ஆடை' இயக்குநர்

By Siva

சென்னை: ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் வித்தியாசமாக நடித்துள்ள ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே அனைவரையும் அதிர வைத்தது. இந்நிலையில் வெளியான டீஸரில் அமலா பால் ஆடையில்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடையாதவர்களே கிடையாது.

அந்த ஆடையில்லா காட்சி 20 நாட்களாக படமாக்கப்பட்டதாம்.

அமலா பால்

அமலா பால்

அமலா பாலின் ஆடை பட டீஸரை பார்த்து அவரை கண்டமேனிக்கு திட்டியவர்களை விட அவரின் துணிச்சலை பாராட்டியவர்களே அதிகம். 20 நாட்கள் பாவம் அமலா பால் எப்படி தான் நடித்தாரோ. கேமராவுக்கு முன்பு எப்படி நெளிந்தாரோ. இருந்தாலும் இப்படி துணிந்து ரிஸ்க் எடுத்து நடித்ததை பாராட்டியே ஆக வேண்டும் என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

வடிவேலு

வடிவேலு

எந்த படத்தின் டீஸர் வெளியானாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆடை பட டீஸரின் வடிவேலு வெர்ஷனும் வந்துள்ளது. சும்மா சொல்லக் கூடாது வடிவேலு வெர்ஷன் டீஸர் அருமையாக உள்ளது. அதனால் தான் அந்த டீஸரை ஆடை பட இயக்குநர் ரத்னகுமாரே ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அமலாவை கிண்டல் செய்ய அல்ல மாறாக அந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டவே அவர் ஷேர் செய்தார். அதனால் அமலாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ரத்னகுமார்.

வடிவேலு

எந்த படத்தின் டீஸர் வெளியானாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆடை பட டீஸரின் வடிவேலு வெர்ஷனும் வந்துள்ளது. சும்மா சொல்லக் கூடாது வடிவேலு வெர்ஷன் டீஸர் அருமையாக உள்ளது. அதனால் தான் அந்த டீஸரை ஆடை பட இயக்குநர் ரத்னகுமாரே ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அமலாவை கிண்டல் செய்ய அல்ல மாறாக அந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டவே அவர் ஷேர் செய்தார். அதனால் அமலாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ரத்னகுமார்.

சினிமா

சினிமா

சில, பல பிரச்சனைகளால் வடிவேலு படங்களில் நடிக்காமல் உள்ளார். ஆனால் அவரை யாருமே மறக்கவில்லை. அவர் மீம்ஸ்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த நடிகருக்கும் இல்லாத சிறப்பு வடிவேலுவுக்கு உண்டு. எந்த புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் வந்தாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வருகிறது. இது வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம். ஆம், இது பாக்கியம் தான். காரணம் அவர் நடிக்காவிட்டாலும் அவரை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ரத்னகுமார்

ரத்னகுமார்

அமலா பால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்றால் அந்த கதை அப்படி என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே ஆடை படத்தை பார்த்துவிட வேண்டும் என்று பலர் முடிவு செய்துள்ளனர். ரத்னகுமார் டீஸர் மூலம் ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் கண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X