ஆதலால் காதல் செய்வீர்...!

By Sudha

சென்னை: சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ஆதலால் காதல் செய்வீர். டைட்டிலுக்கேற்ப இது ஒரு பக்காவான காதல் படம்.

அதிரடிக்குப் பின்னர் காதல்

அதிரடிக்குப் பின்னர் காதல்

சுசீந்திரன் கடைசியாக இயக்கிய படம் ராஜபாட்டை. விக்ரம், தீக்ஷா சேத் உள்ளிட்டோரை வைத்து இயக்கிய இந்த அதிரடிப் படம் பெரிதாக ஓடவில்லை. இந்த நிலையில் மென்மையான காதலுக்கு திரும்பியுள்ளார் சுசீந்திரன்.

யாருமே சொல்லாத காதல்

யாருமே சொல்லாத காதல்

இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே இப்படி காதலை சொன்னதில்லை என்று கூறும் அளவுக்கு இதில் காதலை வித்தியாசமாக காட்டியுள்ளாராம் சுசீந்திரன்.

என்ன படம்னே சொல்ல முடியாதுங்க!

என்ன படம்னே சொல்ல முடியாதுங்க!

இந்தப் படத்தை இந்த மாதிரியான படம் என்று குறிப்பிட்டுக் கூற முடியாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கும்படி கதையை அமைத்துள்ளாராம் சுசீந்திரன்.

2வது பாதியில்தான் மேட்டரே இருக்காம்

2வது பாதியில்தான் மேட்டரே இருக்காம்

படத்தின் முதல் பாதி வரை யாருக்கும் எந்தப் பாதிப்புமே இருக்காதம். ஆனால் 2வது பாதியில்தான் படத்தின் தாக்கம் பார்ப்பவர்களைத் தாக்குமாம்.

லயோலா காலேஜ் பையன்

லயோலா காலேஜ் பையன்

படத்தின் ஹீரோவாக நடிப்பவர் சந்தோஷ். இவர் லயோலா கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறாராம். பார்க்க படு பளிச்சென இருக்கிறார்.

வழக்கு எண் பொண்ணு...

வழக்கு எண் பொண்ணு...

நாயகியாக நடிப்பவர் மனீஷா யாதவ். இவர் ஏற்கனவே வழக்கு எண் 18/9 படத்தில் நடித்துப் பெயர் வாங்கியவர்.

கல்லூரிப் பசங்களும் நடிக்கிறாங்க

கல்லூரிப் பசங்களும் நடிக்கிறாங்க

இப்படத்தில் லயோலா மற்றும் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவ, மாணவியரும் கூட நடித்துள்ளனராம்.

பூர்ணிமா பராக் பராக்!

பூர்ணிமா பராக் பராக்!

நீண்ட காலமாக நடிப்பு பக்கமே தலை காட்டாமல் வீட்டோடு இருந்த பூர்ணிமா பாக்கியராஜ் இப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாராம்.

இசைக்கு யுவன் ஷங்கர்.. பாடலுக்கு வாலி

இசைக்கு யுவன் ஷங்கர்.. பாடலுக்கு வாலி

படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனிக்க, பாடல்களை வாலியும், யுகபாரதியும் எழுதியுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X