விஜய்க்கும் தலைவர் ரஜினி சார்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.. சரண்டர் ஆன ஆதவ் அர்ஜுனா!
சென்னை: நடிகர் விஜய்யின் தவெகவின் தலைமைப் பொறுப்புகளில் மிகவும் முக்கியமானவராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் கடந்த வாரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், “ ரஜினி சார் கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருந்த போது அவரை திமுக குடும்பம் மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் செய்தது. ஆனால் நமது தலைவர் விஜய் அப்படி இல்லை, அவர் மனவலிமை கொண்டவர். தன்மீது எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும் அதற்கு எல்லாம் பின் வாங்காமல் மக்களுக்காக களத்தில் இருக்கிறார் என்று பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை பெருமளவில் கோபப்படுத்தியது. மேலும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு ரஜினிக்கு மனவலிமை இல்லையா என்பது போல இருக்கிறது என்று ரஜினி ரசிகர்கள் காட்டமாக பதிலடி கொடுத்தார்கள். இதற்கு ரஜினி தரப்பில் இருந்து வெளியான கடிதத்தில் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லிவிட்டார். தனக்கு ஆதரவாக பேசிய அனைவருக்கும் நன்றி. காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது கடிதத்தை அடுத்து, ஆதவ் அர்ஜுனா சென்னையில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில், மனிப்பு கேட்டார். அதாவது எங்கள் தலைவருக்கும் தலைவர் ரஜினி சார். நான் சொன்ன கருத்து அவரைக் காயப்படுத்தி உள்ளது. எனவே நான் அவரது வருத்தத்தை புரிந்து கொள்கிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்கிறேன் என்று பேசினார். இவரது பேச்சையைடுத்து ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசமாக உள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா பேசுகையில், நான் அப்போது பதிவு செய்ய நினைத்த கருத்து என்பது, ரஜினி சார் மீது திமுக பல அவதூறு கருத்துக்களை வெளியிட்டது. நாங்கள் அப்போது எடுத்த கருத்துக் கணிப்பில் ரஜினி சாருக்கு 18 சதவீத வாக்குகள் இருந்தது. இது எல்லாம் ரஜினி சாருக்குத் தெரியுமா தெரியாதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் திமுக அதைப் பார்ர்த்து பயப்பட்டு, அவருக்கு எதிராக பல சதி வேலைகளைச் செய்தது. அதைத்தான் நான் குறிப்பிட நினைத்தேன். இப்போது நான் மன்னிப்பு கேட்பதும் வருத்தம் தெரிவிப்பதும் ரஜினி சாருக்கும் மட்டும் தான் என்றும் குறிப்பிட்டார்.
ஆதவ் ஆர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு அரசியல் தளத்தில் கவனம் கிடைத்திருந்தாலும், ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் மன்னிப்பு கேட்டிருந்தால் அது அவருக்கு தேர்தலில் கை கொடுத்திருக்கும் என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











