விஜய் கட்டிப்போட வேண்டும்.. இல்லையென்றால் சிக்கல்தான்.. ரஜினியின் பதிலடி.. ப்ளூ சட்டை மாறன் அட்வைஸ்
சென்னை: தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சில நாட்களுக்கு முன்பு ரஜினி குறித்து பேசிய அவதூறு கருத்து பெரிய கண்டனங்களை சம்பாதித்தது. ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருமே அவருக்கு எதிராக தங்களது கருத்தை தெரிவித்தார்கள். மேலும் ரஜினிகாந்த்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு தவெக தலைவர் விஜய்க்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய்; தேர்தலை சந்திப்பதற்கு முழுமூச்சாக வேலை பார்த்துவருகிறார். என்டிஏ கூட்டணிக்கு செல்லவிருக்கிறார் என வெளியான தகவல்களை எல்லாம் திட்டவட்டமாக மறுத்து; தேர்தலை தனித்து சந்திக்க முடிவு செய்திருக்கிறது தவெக. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் அவருடன் இருப்பவர்களாலேயே விஜய்க்கு தொடர்ந்து பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் சங்கீதா விவாகரத்து மனுத்தாக்கல் செய்தார்; மேலும் நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் பேசினார்.

ஆதவ் அர்ஜுனாவின் செயல்: அது ஓய்வதற்குள்ளாகவே திரிஷாவுடன் ஒன்றாக விஜய் வந்தது சர்ச்சையானது. இவ்விரண்டு விஷயங்களும் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போதே; அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "ரஜினியை திமுக மிரட்டியது. அதனால்தான் அவர் அரசியலுக்கு வரவில்லை. அந்த மிரட்டலை தாங்கும் மன வலிமை ரஜினிக்கு அப்போதைக்கு இல்லை. ஆனால் விஜய் அப்படி இல்லை. எதிலிருந்தும் பின்வாங்கமாட்டார்" என கூறியிருந்தார்.
சுற்றிலும் கண்டனங்கள்: அவர் அப்படி பேசியதை பார்த்து ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தார்கள். மேலும் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருமே, ஆதவ் அப்படி பேசியதற்கு தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார்கள். அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் ரஜினிகாந்த்தின் கெத்தான் செயல்களை எல்லாம் பட்டியலிட்டு; நீங்கள் எல்லாம் ரஜினியை பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லை; உங்கள் தலைவர், அண்ணன் மாதிரி கொடநாடு கேட்டில் போய் நிற்கவில்லை என்றெல்லாம் விளாசினார்கள். மேலும் விஜய் இந்த விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறார்; எனில் ஆதவ்வின் பேச்சை அவர் ரசிக்கிறாரோ எனவும் கேள்வி எழுப்பினார்கள்.
ரஜினியின் பதிலடி: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தும் தனது பங்குக்கு தரமான பதிலடியை இன்று கொடுத்திருக்கிறார். மேலும் தனக்கு ஆதரவாக பேசிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்து, 'காலம் பேசாது.. காத்திருந்து பதில் சொல்லும்' என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவரது பதிலடியை குறிப்பிட்டு, பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆதவ் அர்ஜுனாவின் வாயை விஜய் கட்டிப்போடாவிட்டால் தொடர்ந்து பல சிக்கல்களை தவெக சந்திக்கும் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்' என தெரிவித்திருக்கிறார்.
ரஜினியின் அறிக்கை: முன்னதாக ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், " தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திருஅண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன்,, திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு: "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்" என தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications















