Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆலுமா டோலுமா பாடலுக்கு நிக்கியுடன் ஆட்டம் போட்ட ஆதி.. அட்டகாசமாக ஆரம்பமான திருமண நிகழ்ச்சி!
சென்னை: நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமண நிகழ்ச்சிகள் ஹல்தி எனும் நலங்கு நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது.
வெள்ளை நிற குர்தாவில் ஆதியும், வெள்ளை நிற லெஹங்காவில் நிக்கி கல்ராணியும் ஹல்தி விழாவில் கலந்து கொண்ட நிலையில், இருவருக்கும் நடந்த நலங்கு நிகழ்ச்சியில் அவர்கள் உடையே மஞ்சளாக மங்கலகரமாக மாறிவிட்டன.
மேலும், அஜித்தின் வேதாளம் படத்தின் பாடலான ஆலுமா டோலுமா பாடலுக்கு மணமக்கள் இருவரும் நடனமாடும் வீடியோக்களும் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
நண்பர்களுடன் கதறி அழும் யாஷிகா… காரணம் புரியாமல் குழம்பிய ரசிகர்கள் !

7 வருட காதல்
யாகாவராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே நடிகர் ஆதிக்கும் நிக்கி கல்ராணிக்கும் காதல் ஏற்பட்டது. மரகத நாணயம் படத்தில் மேலும், வளர்ந்த காதல் டேட்டிங், மீட்டிங் என சென்றது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர். இருவரது திருமண நிகழ்ச்சிகளும் மெஹந்தி, சங்கீத், ஹல்தி என சென்னையில் களைகட்டி வருகிறது.

நிச்சயதார்த்தம்
கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இந்த நட்சத்திர காதல் ஜோடியினர் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ளலாம் என இரு வீட்டாரின் சம்மதத்துடன் முடிவு செய்து நிச்சயமும் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் தற்போது திருமணத்திற்கு முந்தைய சடங்கு நிகழ்ச்சிகள் களைகட்டி உள்ளன.
|
ஆலுமா டோலுமா
ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் மெஹந்தி திருவிழாவில் நடிகர் அஜித் குமாரின் வேதாளம் படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ஆலும டோலுமா பாடல் போடப்பட்டது. டோலிவுட் நடிகர்கள் நானி மற்றும் சந்தீப் கிஷன் உடன் இணைந்து கொண்டு ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

அஜித்துக்கு அழைப்பு
சமீபத்தில் ஹைதராபாத்தில் ஏகே61 ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர் ஆதி தனது திருமணத்துக்கு கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். அஜித் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தன. ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணத்துக்காக அஜித் சென்னைக்கு திரும்ப உள்ளார்.

ஆர்யா சாயிஷா வாழ்த்து
கோலிவுட் நடிகர்களான ஆர்யா மற்றும் சாயிஷா நேரில் சென்று ஆதி மற்றும் நிக்கி கல்ராணியை வாழ்த்தி உள்ளனர். மெட்ரோ படத்தின் நடிகர் சிரிஷும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தி உள்ளார். திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளி வருகின்றன. விரைவில் நடிகை நிக்கி கல்ராணி கழுத்தில் ஆதி தாலி கட்ட உள்ளார். அதன் புகைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.