நயன்தாரா ஸ்பெயின் போனா.. நான் பாரீஸ் போறேன்.. 100வது நாள் ஹனிமூனை கொண்டாடும் நிக்கி கல்ராணி!

சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு முன்பாக இந்த ஆண்டு மே மாதம் நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

Recommended Video

Aadhi-NikkiGalrani-க்கு கோலாகலமாக திருமணம்; குவியும் ரசிகர்களின் வாழ்த்து! | Filmibeat Tamil

திருமணம் ஆன 100வது நாளை கொண்டாடும் விதமாக நிக்கி கல்ராணி மற்றும் ஆதி பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் அடுத்த ஹனிமூனை செம ஹாட்டாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த ரொமான்டிக் போட்டோக்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஒரே ஹனிமூன் கொண்டாட்டம் தான்

ஒரே ஹனிமூன் கொண்டாட்டம் தான்

கோலிவுட்டில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் தொடர்ந்து ஒரு ஹனிமூனை கடந்து இரண்டாவது ஹனிமூனை தங்களது ஜோடியுடன் படு ரொமான்டிக்காக கொண்டாடி வருகின்றனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரண்டாவது ஹனிமூனை ஸ்பெயினில் கொண்டாடி வரும் நிலையில், நிக்கி கல்ராணி - ஆதி ஜோடி பிரான்ஸ் நாட்டில் தங்களது 100வது நாள் ஹனிமூன் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

மே 18ல் திருமணம்

மே 18ல் திருமணம்

யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண வரவேற்பில் தெலுங்கு நடிகர் நானி, கோலிவுட் பிரபலங்கள் ஆர்யா - சாயிஷா, பிக் பாஸ் பிரபலங்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கலிபோர்னியாவில் ஹனிமூன்

கலிபோர்னியாவில் ஹனிமூன்

டார்லிங், யாகாவராயினும் நாகாக்க, கோ 2, மொட்டை சிவா கெட்ட சிவா, ஹரஹர மகாதேவகி, மரகத நாணயம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பெங்களூருவை சேர்ந்த நடிகை நிக்கி கல்ராணி, மிருகம், ஈரம், அரவாண் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கலிபோர்னியாவுக்கு ஹனிமூனுக்கு சென்றிருந்தனர். அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு டிரெண்டாக்கிய இருவரும் தற்போது, திருமணமான 100வது நாளை பிரான்ஸ் நாட்டில் கொண்டாடி வருகின்றனர்.

ஈஃபிள் கோபுரம் அருகே

ஈஃபிள் கோபுரம் அருகே

நயன்தாரா - விக்னேஷ் சிவனை போலவே இவர்களும் ஒரு கேமரா டீமுடன் 100வது நாள் திருமண நாளை கொண்டாட பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர் அருகே படு ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X