ஹன்சிகாவின் புதிய 'பார்ட்னர்' இந்த பிரபல நடிகர் தான்!
பார்ட்னர் படத்திற்காக நடிகை ஹன்சிகாவுடன் முதல் முறையாக இணைகிறார் நடிகர் ஆதி.
சென்னை: நடிகை ஹன்சிகாவுடன் ஆதி நடிக்கும் பார்ட்னர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
ஆர்.எப்.சி. கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.பி.கோலி தயாரிக்கும் புதியபடம் "பார்ட்னர்". இந்த படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, 'டைகர்'தங்கதுரை ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது,

"இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது.

படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கரியரில் முக்கியமான படமாக இருக்கும். மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். இந்தப் பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்" என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று துவங்கியது.


Click it and Unblock the Notifications











