யாருக்குமே இல்லாம அவருக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு.. பிரபல ஹீரோவை காதலிக்கிறாரா நிக்கி கல்ராணி?
சென்னை: நடிகை நிக்கி கல்ராணி, பிரபல ஹீரோவை தீவிரமாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
தமிழில் மிருகம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆதி. இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ரவி ராஜா பினிசெட்டியின் மகன்.
இந்தப் படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கிய ஈரம் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதிலும் அவர் நடிப்பு பேசப்பட்டது.

யாகாவாராயினும் நாகாக்க
பின்னர் அய்யனார், ஆடுபுலி, வசந்தபாலன் இயக்கிய அரவான், யாகாவாராயினும் நாகாக்க உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில் நடித்துகொண்டே தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அங்கு குண்டல்லோ கோதாரி, மலுப்பு, ரங்கஸ்தலம், நீவெவ்வரு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் கிளாப் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை நிக்கி கல்ராணி
இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் இணைந்து யாகாவாராயினும் நாகாக்க படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்தப் படத்தை ஆதியின் அண்ணன் சத்யபிரபாஸ் இயக்கினார். இதையடுத்து மரகதநாணயம் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்தப் படங்களில் நடித்தபோது இருவரும் நட்பாக பழகியதாகவும் பிறகு இது காதலாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிறப்பு அழைப்பு
இந்நிலையில் நடிகர் ஆதி, தனது அப்பாவின் பிறந்த நாளை கடந்த 14 ஆம் தேதி கொண்டாடினார். இதில் அவர் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா இன்டஸ்ட்ரியில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், நடிகை நிக்கி கல்ராணிக்கு மட்டும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டதாம். குடும்பத்தினரை தவிர, அவரும் இந்த பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார்.

அறிவிப்பு வரலாம்
இதனால், இருவரும் தீவிரமாக காதலித்து வருவது உண்மைதான் என்றும் விரைவில் திருமண அறிவிப்பு வரலாம் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த காதல் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னட நடிகையான நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











