ஆதியின் சிவுடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது... மூன்றாவது முறையாக அதே ஹீரோயினுடன் ஜோடியா!
ஹைதராபாத் : ஆதி தெலுங்கில் நடித்துள்ள சிவுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழில் மிருகம், ஈரம் ,யாகாவாராயினும் நாகாக்க ,அய்யனார் போன்ற பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் ஆதியின் சிவுடு படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது . இதில் பிரபல நடிகை உடன் மூன்றாவது முறையாக ஜோடி போட்டுள்ளார்.

வெற்றிகளாக அமைந்தது
மிருகம் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஆதி அதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் நடித்த ஈரம் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் இவருக்கு அங்கும் அடுத்தடுத்த படங்கள் வெற்றிகளாக அமைந்தது.

தரமான திரைப்படங்களை
சமீபகாலமாக இவர் நடித்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஆதிக்கு மரகதநாணயம் மற்றுமொரு வெற்றியை பெற்றுத் தந்தது. கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இரண்டாவது கதாநாயகனாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ரங்கஸ்தலம், சர்ரைநோடு, நின்னுக்கோரி, போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முகத்தில் வெட்டுக்காயங்களுடன்
தற்போது குட்லக் சகி, பார்ட்னர், கிளாப் ஆகிய படங்களில் நடித்து வரும் ஆதி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிவுடு படத்தில் நடிக்க இருக்க அதன் மிரட்டலான ஃபர்ஸ்ட் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு வெளியான சிவுடு போஸ்டரில் ஆதி கொலைவெறியுடன் பார்க்க முகத்தில் வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட வடிகிறது. மேலும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜெய் இசையமைக்கிறார்.

மூன்றாவது முறையாக ஜோடி
ஆதி மற்றும் நிக்கி கல்ராணி மரகதநாணயம்,யாகாவாராயினும் நாகாக்க என இதற்கு முன்பே இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்க இப்போது மூன்றாவது முறையாக சிவுடு படத்திலும் ஜோடி போட்டுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் சிவுடு படத்திலும் இணைந்து நடித்திருக்க இந்த படத்தை ஆதியின் சகோதரர் தயாரித்து உள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் சிவுடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











