பாலய்யா படத்தில் மாஸான வில்லன் கதாப்பாத்திரம்... செம சர்ப்ரைஸ் ஆன அப்டேட் தந்த நடிகர் ஆதி
சென்னை: ஈரம் படத்திற்கு பிறகு, இயக்குநர் அறிவழகன், ஆதி, இசையமைப்பாளர் தமன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சப்தம். இப்படத்தின் டிரைலர் கடந்த 19ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிப்.28ஆம் தேதி சப்தம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஆதி பாலய்யா நடிக்கும் அகண்டா 2 படத்தில் வில்லனாக நடிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் அவர் தனது திரை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதி. பின்னர், ஈரம் படத்தில் ஸ்டைலிஸ் ஆன லுக்கில் போலீசாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் நடித்த மரகத நாணயம், யாகவராயினும் நா காக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் சரைனோடு, Agnyaathavaasi, தி வாரியர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து பிரமிக்க வைத்திருந்தார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆதி - அறிவழகன் கூட்டணி: ஈரம் படத்தை தொடர்ந்து 15 ஆண்டுக்குப் பிறகு ஆதி - அறிவழகனும் இணைந்து சப்தம் படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தில் ஆதி, பேய்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் புலனாய்வாளராக நடித்துள்ளார். இப்படத்தில், சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடிங் கிங்ஸ்லி எம்,எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். 7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. படம் பிப்.28இல் ரிலீஸ் ஆகவுள்ளதால் நடிகர் ஆதி, இயக்குநர் அறவழகனும் இணைந்து பட புரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.
அகண்டா 2 படத்தில் வில்லன்: ஆதி நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அதில் நிக்கி கல்ராணியின் நடிப்பும், நீ கவிதைகளா பாடலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மரகத நாணயம் 2 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக நடிகர் ஆதி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், கூடுதல அப்டேட்டாக பாலய்யா நடிக்கும் அகண்டா 2 படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் என்னை காணலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், நிறைய வில்லன் வேடங்கள் வந்தன, நான்தான் அதை புறக்கணித்தேன் என நடிகர் ஆதி தெரிவித்தார்.
பெரிய படங்களை புறக்கணித்தேன்: பெரிய பெரிய படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. நான்தான் அதனை புறக்கணித்தேன். ஹீரோவாக கமிட் ஆன படங்களில் நடித்து கொடுக்க நேரம் ஒதுக்க வேண்டியது என் கடமை அதை சரியாக செய்ய வேண்டும் என இருந்தேன் என அவர் தெரிவித்தார்.
ஒலியை வைத்து நடக்கும் மேஜிக்: சப்தம் படத்தில் அனுபவம் குறித்து தெரிவித்த நடிகர் ஆதி, ஈரம் படத்தில் ஹாரர் கதையில் நீர் எப்படி பேயாக இருக்கும் என்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும் படம் வெளியான போது ரசிகர்கள் தந்த வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. மேலும், ரசிகர்கள் ஈரம் படத்தை புரிந்துகொண்டனர் என்பது மகிழ்ச்சியை தந்தது. அதே போன்று சப்தம் படமும் ஒலியை வைத்து முயற்சித்துள்ளோம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்பதை நம்புகிறோம். இயக்குநர் அறிவழகன் என்மீது வைத்த நம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











