ஆதிக்கு நோ கட் சென்னை:விஜய்யின் ஆதி படத்திற்கு எந்தவித கட்டிங்கும் இல்லாமல் யுஏ சான்றிதழ் அளித்து படக் குழுவை சந்தோஷப்படுத்தியுள்ளதுசென்சார் போர்டு. விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதி. திருமலை என்ற ஆக்ஷன் படம் மூலம் விஜய்யை அதிரடி ஆக்ஷன்ஹீரோவாக மாற்றிய இயக்குநர் ரமணா இப்படத்தை இயக்கியுள்ளார். ஆதி படப்பிடிப்பு முடிந்து, சமீபத்தில் பாடல் கேசட்டுகளும், டிரெய்லரும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. விஜய்யின் தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யை வைத்து, சூரியன் ஆர்ட்ஸ் என்ற தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள முதல் படம் இது. ஆதி முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து சென்சார் சான்றிதழுக்காக படத்தை அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்தசென்சார் அதிகாரிகள் அசந்து விட்டனராம். ஆக்ஷன், கிளாமர் ஆகியவை படத்தில் ஏராளமாக இருந்தாலும் கூட எல்லாமேவரையறைக்குள் தான் இருப்பதாக தெரிவித்த சென்சார் அதிகாரிகள் ஒரு காட்சியைக் கூட வெட்டச் சொல்லவில்லையாம். மேலும், படத்திற்கு யுஏ (அதாவது எல்லாரும் படத்தைப் பார்க்கலாம்) சான்றிதழும் அளித்துள்ளனர். படம் வெட்டுப்படாமல்திரும்பி வந்ததால் விஜய், ரமணா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும் சந்தோஷமடைந்துள்ளனர். ஆதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது!
சென்னை:
விஜய்யின் ஆதி படத்திற்கு எந்தவித கட்டிங்கும் இல்லாமல் யுஏ சான்றிதழ் அளித்து படக் குழுவை சந்தோஷப்படுத்தியுள்ளதுசென்சார் போர்டு.
விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதி. திருமலை என்ற ஆக்ஷன் படம் மூலம் விஜய்யை அதிரடி ஆக்ஷன்ஹீரோவாக மாற்றிய இயக்குநர் ரமணா இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஆதி படப்பிடிப்பு முடிந்து, சமீபத்தில் பாடல் கேசட்டுகளும், டிரெய்லரும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. விஜய்யின் தந்தைஎஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யை வைத்து, சூரியன் ஆர்ட்ஸ் என்ற தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள முதல் படம் இது.
ஆதி முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து சென்சார் சான்றிதழுக்காக படத்தை அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்தசென்சார் அதிகாரிகள் அசந்து விட்டனராம். ஆக்ஷன், கிளாமர் ஆகியவை படத்தில் ஏராளமாக இருந்தாலும் கூட எல்லாமேவரையறைக்குள் தான் இருப்பதாக தெரிவித்த சென்சார் அதிகாரிகள் ஒரு காட்சியைக் கூட வெட்டச் சொல்லவில்லையாம்.
மேலும், படத்திற்கு யுஏ (அதாவது எல்லாரும் படத்தைப் பார்க்கலாம்) சான்றிதழும் அளித்துள்ளனர். படம் வெட்டுப்படாமல்திரும்பி வந்ததால் விஜய், ரமணா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும் சந்தோஷமடைந்துள்ளனர்.
ஆதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது!


Click it and Unblock the Notifications