சாரட்டில் வந்த ஆதி படப் பெட்டி விஜய் நடித்த ஆதி படத்தின் வெளியீட்டு விழாவை சென்னையில் அவரது ரசிகர்கள் மிக வித்தியாசமாகக் கொண்டாடினார்கள்.ஆதி படப்பெட்டியை வடபழனி முருகன் கோவிலில் வைத்து ரசிகர்கள் சிறப்புப் பூஜை செய்தனர். பிறகு குதிரைகள் பூட்டிய சாரட்வண்டியில் அதை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். சாரட் வண்டிக்கு முன்னால் பேண்டு, வாத்தியங்கள் முழங்க ரசிகர்கள்ஆடிப்பாடி சென்றனர்.பிறகு படப்பெட்டியை கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் செட்டியாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின்தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார்.பிறகு சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் படங்கள் அனைத்தும் சொன்ன தேதியில் வெளி வந்தது. ஆனால் இந்த படம் ஒரு நாள் தாமதமாகிவிட்டது. இதுரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய்க்கே வருத்தமாகிவிட்டது. இந்த தாமதத்திற்கு விஜய் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.படத்தின் எடிட்டருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படத்தை உரிய நேரத்தில் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கமுடியவில்லை.ஆதி படத்திற்கு மொத்தம் 286 பிரிண்ட்டுகள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு மட்டும் 176 பிரிண்ட்டுகள்கொடுத்துள்ளோம். வெளிநாடுகளுக்கும் அனுப்பி விட்டோம்.சென்னையை போலவே விஜய் ரசிகர்கள் மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் ஊர்வலமாக படப்பெட்டியை எடுத்துசென்று தியேட்டர்களில் கொடுத்துள்ளார்கள் என்று கூறினார்.

By Staff

விஜய் நடித்த ஆதி படத்தின் வெளியீட்டு விழாவை சென்னையில் அவரது ரசிகர்கள் மிக வித்தியாசமாகக் கொண்டாடினார்கள்.

ஆதி படப்பெட்டியை வடபழனி முருகன் கோவிலில் வைத்து ரசிகர்கள் சிறப்புப் பூஜை செய்தனர். பிறகு குதிரைகள் பூட்டிய சாரட்வண்டியில் அதை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். சாரட் வண்டிக்கு முன்னால் பேண்டு, வாத்தியங்கள் முழங்க ரசிகர்கள்ஆடிப்பாடி சென்றனர்.

பிறகு படப்பெட்டியை கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் செட்டியாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின்தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார்.

பிறகு சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:


விஜய் படங்கள் அனைத்தும் சொன்ன தேதியில் வெளி வந்தது. ஆனால் இந்த படம் ஒரு நாள் தாமதமாகிவிட்டது. இதுரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய்க்கே வருத்தமாகிவிட்டது. இந்த தாமதத்திற்கு விஜய் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

படத்தின் எடிட்டருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படத்தை உரிய நேரத்தில் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கமுடியவில்லை.

ஆதி படத்திற்கு மொத்தம் 286 பிரிண்ட்டுகள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு மட்டும் 176 பிரிண்ட்டுகள்கொடுத்துள்ளோம். வெளிநாடுகளுக்கும் அனுப்பி விட்டோம்.

சென்னையை போலவே விஜய் ரசிகர்கள் மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் ஊர்வலமாக படப்பெட்டியை எடுத்துசென்று தியேட்டர்களில் கொடுத்துள்ளார்கள் என்று கூறினார்.

Read more about: vijays aadhi released
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X