»   »  இழுத்தடித்த சிம்பு… மீண்டும் ஜிவியுடன் இணைந்த ஆதிக்… த்ரிஷா இல்லனா நயன் தாரா பார்ட்2?

இழுத்தடித்த சிம்பு… மீண்டும் ஜிவியுடன் இணைந்த ஆதிக்… த்ரிஷா இல்லனா நயன் தாரா பார்ட்2?

Posted By:
Subscribe to Oneindia Tamil

யார் எப்படி போனா எங்களுக்கென்ன..? எங்களுக்கு குறிக்கோள் பணம் மட்டும்தான்... என்றுதான் இப்போதைய தலைமுறை உருவாகி வருகிறது.

இதற்கு உதாரணமாகவே சென்ற ஆண்டு பெண்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட த்ரிஷா இல்லேனா நயன்தாரா வெளியானது. ஒரு பக்கம் விமர்சகர்கள் கழுவி ஊற்ற ஊற்ற இன்னொரு பக்கம் கலெக்‌ஷன் எகிறியது.

Aadhik again joins with GV Prakash

சும்மா இருப்பாரா சிம்பு? இப்படி ஒரு ஆளைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன் என்று ஆதிக்கிடம் கதை கேட்டு ஓகே சொன்னார். ஏஏஏ என்ற விவகாரமான தலைப்புடன் அதற்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என விளக்கமும் கொடுத்து ஃபர்ஸ்ட்லுக் விட்டார்கள்.

ஆனானப்பட்ட கவுதம் மேனன், செல்வராகவன், பாண்டிராஜையே ஆட்டி பார்த்த சிம்பு ஆதிக்கை சும்மா விடுவாரா? ஷூட் ஆரம்பிக்கவே லேட் ஆகிக்கொண்டிருக்க இது ஆகாத கதை என ஆதிக்குக்கு தெரிந்துவிட்டது. எனவே இனி சிம்புவை நம்பினால் சிக்கல் தான் என மீண்டும் ஜிவி.பிரகாஷையே நாடிவிட்டார்.

அவரும் ஓகே சொல்ல படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

படத்தின் பெயர் வெர்ஜின் மாப்ளே!

English summary
Trisha Illanna Nayanthara fame director Adhik Ravichandiran is joining again with GV Prakash after dropped his AAA with Simbu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil