»   »  கமல் ஹாஸனை இயக்குகிறேனா? - த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் விளக்கம்!

கமல் ஹாஸனை இயக்குகிறேனா? - த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தையடுத்து, கமல் ஹாஸனை வைத்து படம் இயக்கப் போவதாக வந்துள்ள செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் கமல் ஹாசன் அவர்களின் ஆசி பெற அணுகிய போது பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு எங்களை சந்தித்தார்.

Aadhik Ravichandiran denies reports on Kamal project

அவருடன் மகழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த போது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நினைவானதாகவே உணர்ந்தேன்.

நேரம் கிடைக்கும் போது த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்த போது பெருந்தன்மையுடன் பரிசீளிப்பதாக கூறினார்.

இந்நிலையில் இன்று ஒரு நாளிதழில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன.

இது முற்றிலும் தவறான செய்தியாகும். சினிமா வாழ்வில் ஆரம்பகட்டதில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சி தருகிறது.

நானும் என் தந்தையும் என்றென்றும் உலகநாயகனின் உண்மையான மற்றும் நேர்மையான ரசிகர்கள். இந்த செய்தி வெளியானதால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more about: kamal, கமல்
English summary
Aadhik Ravichandiran, the director of Trisha Illanna Nayanthara has denied reports on his project with Kamal Hassan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil