Good Bad Ugly: அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய ஆதிக் பர்த்டே.. ’குட் பேட் அக்லி’ எப்போ ரிலீஸ்?
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமாரை வைத்து அடுத்ததாக 'குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி வரும் ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் #GoodBadUgly ஹாஷ்டேக்கை போட்டு டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாளை கொண்டாடும் அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் விதமாக செம அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் தான் வெளியாகும் என்றும் கூறப்பட்ட நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் எப்போ? என்கிற கேள்வியை எழுப்பிய ரசிகர்களுக்கு பதில் கிடைத்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஹேப்பி பர்த்டே: த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கினார். அதன் பின்னர், பிரபுதேவாவை வைத்து பஹீரா படத்தை இயக்கினார்.
ஆனால், அந்த படங்கள் ஃபிளாப் ஆகின. கடைசியாக விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வரை வசூல் ஈட்டிய நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1991ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தல பொங்கல்: அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி விஜய்யின் தளபதி 69 வெளியாகும் என இப்பவே அறிவித்து விட்டனர். அதே போல அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விடாமுயற்சி படம் லேட்டாக ரிலீஸ் ஆனாலும், அதை பற்றி கவலைப்படாமல் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வரும் என மீண்டும் தயாரிப்பு நிறுவனம் உறுதிபடுத்தி ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. விரைவில் அஜித்தின் குட் பேட் அக்லி அப்டேட்களும் அணிவகுக்க காத்திருக்கின்றன.
விடாமுயற்சி ரிலீஸ் எப்போ?: டிசம்பர் மாதம் அஜித்தின் விடாமுயற்சி வெளியாகுமா? அல்லது குட் பேட் அக்லி படத்துக்குப் பிறகு பிப்ரவரி மாதம் வெளியாகுமா? என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. வேட்டையன் பட வேலைகளில் லைகா பிசியாக உள்ள நிலையில், விடாமுயற்சி படத்தை தற்போது கண்டுக் கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அர்ஜுன் விடாமுயற்சி திரைப்படம் இன்னும் 3 மாதத்தில் வரும் என்றார்.


Click it and Unblock the Notifications











