இதுதான் என் கடைசி ‘ஏ’ சர்டிபிகேட் படம்.. ஆதிக் ரவிச்சந்திரன் திடீர் ட்வீட்.. திருந்திட்டாரா?
சென்னை: திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் "பிட்டு படம் டி"ன்னு பாடலை வைத்து இளைஞர்களை கவரும் விதத்தில் அதிகமான அடல்ட் சீன்களை வைத்து பிரபலமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஜிவி பிரகாஷ் குமார் பால் பக்கெட்டை கையால் அழுத்தி உடைக்கும் காட்சிகள் எல்லாம் பெரும் சர்ச்சையை கிளப்பின.
தொடர்ந்து ஏ சான்றிதழ் படங்களையே இயக்கி வந்த ஆதிக் ரவிச்சந்திரன் பகீரா படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இதுதான் தனது கடைசி ஏ சான்றிதழ் படம் என திடீரென ட்வீட் போடுவதற்கு பின்னணியில் என்ன காரணம் என கேள்விகள் கிளம்பி உள்ளன.

அடல்ட் படங்கள்
சில இளம் இயக்குநர்கள் முதல் படத்திலேயே சர்ச்சைகளை கிளப்பினால் பெரிய இயக்குநராக மாறிவிடலாம் என நினைத்து அடல்ட் படங்களை இயக்கி வெளியிட்டு வருகின்றனர். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் வரிசையாக அடல்ட் படங்களை இயக்கி வந்ததை போலவே ஆதிக் ரவிச்சந்திரனும் அடல்ட் படங்களை இயக்கி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

திரிஷா இல்லனா நயன்தாரா
திரிஷா இல்லனா நயன்தாரா என டைட்டிலே வித்தியாசமாக வைத்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவி பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ்வை வைத்து இயக்கிய திரைப்படத்தில் ஏகப்பட்ட ஆபசக் காட்சிகளும், டபுள் மீனிங் வசனங்களும் கொட்டிக் கிடந்தன. அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சிம்புவின் AAA படத்தை இயக்கினார்.

எத்தனை A
சிம்புவை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படத்தின் டைட்டிலேயே மூன்று Aக்கள் வரும் படி படத்தை இயக்கினார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடாமல் ஃபிளாப் ஆகி விட்டது. தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படங்களும் சொதப்ப ஆரம்பித்தன. பிரபுதேவாவை வைத்து சைக்கோ த்ரில்லர் படத்தை 2018ல் எடுக்க ஆரம்பித்த ஆதிக் ரவிச்சந்திரன் அந்த படத்தில் 7 ஹீரோயின்களை நடிக்க வைத்து பரபரப்பை கிளப்பினார்.

7 ஹீரோயின்கள்
பிரபுதேவா இந்த படத்தில் மொட்டை அடித்தும், மீசை இல்லாமல் நடித்தும் சைக்கோவாக மிரட்டி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் ஹீரோயின்களாக ஜனனி அய்யர், அமைரா தஸ்தூர், காயத்ரி, ரம்யா நம்பீசன், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் மற்றும் சஞ்சிதா ஷெட்டி என மொத்தம் 7 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

ஆபாசக் காட்சிகள்
சிகப்பு ரோஜாக்கள், மன்மதன் பட பாணியில் இந்த பஹீரா படத்தின் கதை பெண்களை பழிவாங்கும் சைக்கோவின் படமாக உருவாகி உள்ளது. இதில், ஏகப்பட்ட ஆபாசக் காட்சிகள் நிறைந்து உள்ள நிலையில், இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. படம் எடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு இந்த வெள்ளிக்கிழமை தான் படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதுதான் கடைசி ஏ படம்
தொடர்ந்து ஏ சான்றிதழ் படங்களை இயக்கி வந்த ஆதிக் ரவிச்சந்திரன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காமல் போன நிலையில், பஹீரா தான் தனது கடைசி ஏ சான்றிதழ படம் என திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் உருக்கமாக ட்வீட் போட்டு, இனிமேல் இதுபோன்ற படங்களை இயக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக விஷால், எஸ்.ஜே. சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், அந்த படத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் மயிரிழையில் உயிர் தப்பித்ததாக பதிவிட்டு இருந்தனர்.


Click it and Unblock the Notifications











