விஜய் சேதுபதி, பாபி சிம்மா.. அல்லு அர்ஜுனின் அந்தப் பிரமாண்ட படத்தில் இந்த ஹீரோவும் நடிக்கிறாராமே!
சென்னை: அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் மற்றொரு தமிழ் ஹீரோவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார்.
தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார் அல்லு அர்ஜூன்.

டிவிட்டர் சாதனை
இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பர்ஸ்ட் லுக் போஸ்டர், வெளியான 24 மணி நேரத்தில் அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது. இந்தப் படம், செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தார். அவர் அதிக சம்பளம் கேட்டதால் அவரை நீக்கிவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.

லாக்டவுன் காரணமாக
இதனால், கன்னட ஹீரோ ஒருவர் நடிப்பதாகவும் பாபி சிம்மாவும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை. இந்தப் படத்தின் ஷூட்டிங் லாக்டவுன் காரணமாகத் தடைபட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடித்து ஜனவரியில் வெளியான அலா வைகுந்தபுரம்லோ சூப்பர் ஹிட்டானதால், இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்தப் படத்துக்கும் அதிக பொருட்செலவில் ஆக்ஷன் காட்சிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

ஊர்வசி ரவ்தெலா
இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட பிரபல பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவ்தெலாவிடம் பேசி வந்தனர். அவர் முடிவாகிவிடுவார் என்றே கூறப்பட்டது. ஆனால் அவர் ஒரு பாடலுக்கு ஆட, ஒரு கோடி ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. இப்போதைய சூழலில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக, அவ்வளவு ரூபாயை செலவழிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் வேறு நடிகையை தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

முக்கிய கேரக்டரில்
இந்நிலையில் நடிகர் ஆதி இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தெலுங்கிலும் ஹீரோவாக நடித்து வந்த ஆதி, அல்லு அர்ஜுனுடன் ஏற்கனவே சர்ரைனோடு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் மீண்டும் இணைய இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ராம்சரண் தேஜா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் அவருக்கு சகோதரராகவும் நடித்திருந்தார்.
Recommended Video

யாகாவாராயினும் நாகாக்க
மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஆதி, தமிழில் சாமி இயக்கிய மிருகம் படம் மூலம் மிரட்டலாக அறிமுகமானார். அடுத்து அறிவழகன் இயக்கிய ஈரம் படத்தில் அவர் நடிப்புப் பேசப்பட்டது. பின்னர் அய்யனார், ஆடுபுலி, வசந்தபாலன் இயக்கிய அரவான், யாகாவாராயினும் நாகாக்க உட்பட சில படங்களில் நடித்தார்.


Click it and Unblock the Notifications











