அமெரிக்காவில் ஆடித் திருவிழா கொண்டாடப் போகும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஹாஸ்டனில் ஒலிக்கப் போகும் பொன்னி நதி!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி தற்போது வெளியாகி உள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற விழாவுக்கு இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் வராத நிலையில், அமெரிக்காவில் ஏ.ஆர். ரஹ்மான் இன்று பொன்னி நதி பாடலின் லைவ் கன்செர்ட் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

மந்திர பொன்னி நதி
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து தனது மாயக் குரலால் பாடி உள்ள பொன்னி நதி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் விழாவில் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஜெயராம் உள்ளிட்ட மூன்று பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். பாவனா பாலகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொன்னியின் செல்வன் முதல் பாடலான பொன்னி நதியில் வரும் கார்த்தியின் வந்தியத்தேவன் விசுவல்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் எங்கே
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியீட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என ஏகப்பட்ட ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், லைகா நிறுவனம் ஏ.ஆர். ரஹ்மான் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற அசத்தலான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆடித்திருவிழா
அமெரிக்காவில் ஆடித்திருவிழா என்கிற டைட்டிலுடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாடலான பொன்னி நதி பாடலை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணாத்தில் உள்ள ஹாஸ்டன் நகரில் இன்று இரவு லைவ் கன்செர்ட்டாக பாடப் போகிறார் என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டு பொன்னியின் செல்வன் ரசிகர்களையும், ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
Recommended Video

விக்ரம் வரல
பொன்னியின் செல்வன் டீசருக்கு வராமல் இருந்த நிலையில், நடிகர் விக்ரம் இன்றைக்காவது முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் அவர் வராதது ர்சிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆதித்த கரிகாலனின் போஸ்டர்கள் மட்டுமே அந்த பிரம்மாண்ட திரையில் அடிக்கடி காட்டப்பட்டன. ஒட்டுமொத்த இசை வெளியீட்டு விழாவுக்காவது விக்ரம் பங்கேற்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











