அடப்பாவமே.. வெளிநாட்டில் இருந்து பிரபல ஹீரோவுடன் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை!
கொச்சி: பிரபல ஹீரோவுடன் ஜோர்டானில் இருந்து கேரளா திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் பிருதிவிராஜ், ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். பிளஸ்சி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினீத் ஶ்ரீனிவாசன், லக்ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.

வெளிநாட்டில்
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்தின் கதை வெளிநாட்டில் பாலைவனத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் படப்பிடிப்பை ஜோர்டானில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட படக்குழு கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் சென்றது.

படப்பிடிப்பு நிறுத்தம்
அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்த போதுதான், கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தது. ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்தக் கொள்ள, அந்நாடு அனுமதி அளித்திருந்தது. பின்னர் அங்கு கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால், படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஷூட்டிங்
இதனால் படக்குழு இந்தியா திரும்ப முடிவு செய்தது. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுபற்றி நடிகர் பிருத்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். பின்னர், இந்தப் படக்குழு ஷூட்டிங்கை அங்கு மீண்டும் ஆரம்பித்து படப்பிடிப்பை முடித்தது.

சிறப்பு விமானம்
இந்நிலையில், ஜோர்டானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு இந்தியா திரும்பியது. கொச்சி விமான நிலையம் வந்த அவர்கள் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டனர். நடிகர் பிருத்விராஜ் கொச்சியில் உள்ள ஓல்ட் ஹார்பர் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 7 நாள் ஓட்டல் தனிமைப்படுத்துதல் முடிந்ததை அடுத்து வீட்டுக்குச் சென்றார்.

ஓட்டல் ஊழியர்கள்
அங்கு 7 நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி குறிப்பிட்டிருந்த அவர், வீட்டுக்குச் செல்வதோடு குவாரன்டைன் காலம் முடிவடைந்துவிடாது. அதனால் அது தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாகக் கடைபிடியுங்கள். வீட்டில் வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அங்கு செல்வதைத் தவிருங்கள்' என்று கூறியிருந்தார்.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில், அவருடன் ஜோர்டானில் இருந்து கேரளா திரும்பிய படக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் இது உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 58 வயதான அவர் மலப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











