Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றிக்கான அஸ்திவாரத்தை போட்டுள்ளது. 16 ஆண்டுகளாக இந்த படத்திற்காக நடிகர் பிரித்விராஜ் மற்றும் படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி ஆகியோர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அந்த உழைப்பிற்கான அறுவடையை அவர்கள் செய்து வருகின்றனர். பென் யாமின் எழுத்தில் வெளியாகி சாகித்ய அகாடமி விருதை பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் அதே பெயரில் தற்போது படமாக உருவாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக ஆடு ஜீவிதம் படம் வெளியாகி உள்ள நிலையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் படம் வெகுவாக கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாத திரைக்கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் பிளெஸ்ஸி. இந்த படத்திற்கு தன்னுடைய நடிப்பால் மிகப்பெரிய அளவில் உயிர் கொடுத்துள்ளார் நடிகர் பிருத்விராஜ். அமலா பாலிற்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும் தன்னுடைய கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார்.

Aadujeevitham movie official collections announced by the team

நடிகர் பிரித்விராஜ்: நடிகர் பிரித்விராஜ் தொடர்ந்து மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் கடந்த ஆண்டில் சலார் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் பிரித்விராஜின் கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம் படம் நேற்றைய தினம் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஆடு ஜீவிதம் படம்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்காக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பிளெஸ்ஸி இருவரும் 16 ஆண்டு காலம் முயற்சிகள் மேற்கொண்டு தற்போது படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். அவர்களின் இந்த 16 ஆண்டு கால தவத்திற்கு தற்போது வரமாக ரசிகர்களின் பாராட்டுக்கள் தொடர்ந்து வருகிறது. இந்தப்படம் கண்டிப்பாக தேசிய விருதுகளை அள்ளும் என்றும் படம் கண்டிப்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அதற்கு தகுதியான படம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபலங்கள் பாராட்டு: இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக பிரீமியர் ஷோவை பார்த்த நடிகர் கமல்ஹாசன் இந்த படம் தனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியதாகவும் படத்தின் நடிகர் பிரித்விராஜ் இந்த அளவிற்கு நடிப்பார் என்று தான் நினைத்து பார்க்கவில்லை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். பிளெஸ்ஸிக்கும் அவர் தன்னுடைய மிகப்பெரிய பாராட்டை கூறியுள்ளார். நடிகர் சூர்யாவும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்த நிலையில் படம் அடுத்தடுத்து பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது.

அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு: படம் சர்வதேச அளவில் 15 கோடிக்கும் மேல் வசூலித்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது குறித்து பிரித்விராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் அறிவித்துள்ளார். படம் சர்வதேச அளவில் 16.7 கோடி ரூபாய்களை முதல் நாளில் வசூலித்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் 1724 திரைகளில் படம் வெளியாகியுள்ளதாகவும் ரசிகர்களின் இந்த வரவேற்பு உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த அன்பு தொடரவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

படக்குழுவினர் எதிர்பார்ப்பு: படத்திற்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வரும் சூழலில் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிழைப்பைத் தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் மோகம் உடையவர்களுக்கு இந்தப்படம் மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. தன்னுடைய மனைவி மற்றும் அம்மாவுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இளைஞர் தன்னுடைய குடும்பத்தை முன்னேற்றும் வகையில் அரபு நாட்டிற்கு சென்று அங்கு ஆடுகளுடன் ஆடாக அடிமை வாழ்க்கையை வாழும் சூழலை இந்தப்படம் காட்சிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X