Aadujeevitham: கனவு நனவான தருணம்.. ஆடு ஜீவிதம் ரிலீசை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது ஆடு ஜீவிதம். பிழைப்பிற்காக அரபு நாடுகளுக்கு செல்லும் இளைஞர், அங்கு படும் அவஸ்தைகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல எழுத்தாளர் பென் யாமினின் ஆடு ஜீவிதம் நாவலை மையமாக வைத்து இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கியுள்ளார். இந்த நாவலை படமாக எடுக்க அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் முயற்சித்து வந்த நிலையில் தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி இணைந்து இசையமைத்துள்ள நிலையில், இவர்களின் கூட்டணி படத்தின் வெற்றிக்கு வேறு லெவலில் உதவி புரிந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்தப் படத்திற்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சவுதி அரேபியாவில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் ஹீரோ, எப்படி அடிமையாக மாற்றப்படுகிறார் என்பதை இந்தக் கதை உணர்வுப்பூர்வமாக ரசிகர்களுக்கு சொல்வதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

Aadujeevitham movie team celebrates the release of the movie with cake cutting

ஆடுஜீவிதம் படம்: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆடு ஜீவிதம் படம் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர் பென் யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் பிளெஸ்ஸி தற்போது வெற்றிப் பெற்றுள்ளார். 10 ஆண்டுகளை கடந்து இந்த முயற்சியில் அவர் ஈடுபட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தை ரசிகர்களுக்கு சிறப்பான வகையில் கொடுத்துள்ளார். பிழைப்பிற்காக சவுதி செல்லும் பிரித்விராஜ், எப்படி அங்கு ஆடு மேய்க்கும் நபராக அடிமையாக மாற்றப்படுகிறார் என்பதை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்: இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிளெஸ்ஸி மற்றும் பிரித்விராஜின் மெனக்கெடல்கள் தெரிகிறது. படத்தில் சில காட்சிகளிலேயே பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்திருக்கும் காட்சிகள் காணப்பட்ட போதிலும், சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படம் நேற்றைய தினம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். 16 ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக பிளெஸ்ஸி மற்றும் பிரித்விராஜ், மிகப்பெரிய அளவில் போராட்டங்களை சந்தித்த நிலையில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கேக் வெட்டி கொண்டாடிய டீம்: இந்தப் படம் சர்வதேச அளவில் 15 கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசை பிரித்விராஜ், பிளெஸ்ஸி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தங்களின் கனவுப்படமான ஆடு ஜீவிதம் படம் நனவாகி, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவது குறித்து இவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படத்தின் இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் கேக்கை ஊட்டி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் பிரித்விராஜ்.


கேரியர் பெஸ்ட் படம்: இதனிடையே பிரித்விராஜ் தன்னுடைய கேரியர் பெஸ்ட் படத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிரித்விராஜின் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்தப் படத்திற்கு தேசிய விருதுகள் அதிகமாக கிடைக்கும் என்றும் ஆஸ்கர் விருது பெறுவதற்கும் இந்தப்படம் தகுதியானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். படத்தின் நடிகர்கள் மட்டுமில்லாமல், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என ஒவ்வொரு தரப்பினரும் தங்களது பெஸ்டை கொடுத்துள்ளதாகவும் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X