Aadujeevitham: பிருத்விராஜ்ஜின் மிரட்டல் ஆரம்பம்... வெளியானது ஆடுஜீவிதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். பிருத்விராஜ் நடித்துள்ள இந்தப் படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. ஆடுஜீவிதம் என்ற நாவலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

வெளியானது ஆடுஜீவிதம் ஃபர்ஸ்ட் லுக்
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவான பிருத்விராஜ் நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாகியிருந்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அவரது நண்பனாக மிரட்டியிருந்தார் பிருத்விராஜ். இந்தப் படம் பான் இந்தியா அளவில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்நிலையில், பிருத்விராஜ் நடித்திருந்த ஆடுஜீவிதம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

 Aadujeevitham: Prithvirajs Aadujeevitham - The Goat Life first look and Release date Revealed now

வித்தியாசமான கதைகளில் அதிக ஆர்வம் காட்டி வரும் பிருத்விராஜ், ஆடுஜீவிதம் படத்தில் கமிட்டாகியிருந்தார். மலையாளத்தில் நாவலாக வெளியான ஆடுஜீவிதம், ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை படைத்தது. அரபு நாட்டிற்கு வேலைக்காக செல்லும் நாயகன், பாலைவனத்தில் ஆடு மேய்க்கிறான். அங்கிருந்து அவனால் தப்பித்து வர முடியாமல் ஆடுகளுடன் ஒருவனாக மாறுவதும் இறுதியில் என்ன ஆனான் என்பதும் தான் கதை.

வாசகர்களை கண்ணீரில் தத்தளிக்க வைத்த ஆடுஜீவிதம், தற்போது படமாக உருவாகியுள்ளது. பிளெஸ்ஸி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆடுஜீவிதம் படத்துக்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தேகத்துடன் ஷூட்டிங் சென்றார் பிருத்விராஜ். ஆனால், அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை முடிக்காமல் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியது ஆடுஜீவிதம் படக்குழு.

அதன்பின்னர் மீண்டும் உருவான ஆடுஜீவிதம் இப்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. பிருத்விராஜ் ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் இருந்து பிருத்விராஜ் - அமலா பால் லிப் லாக் செய்யும் காட்சியுடன் டீசர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்போது ரசிகர்களை மிரட்டும் வகையில், ஆடுஜீவிதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில், அடர்ந்த தாடியுடன் மிரட்டலாக காட்சி தருகிறார் பிருத்விராஜ். மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஆடுஜீவிதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனால் இந்தப் படம் 5 மொழிகளில் வெளியாகும் என்பதும் உறுதியாகியுள்ளது. அதேபோல், ஆடுஜீவிதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் பிருத்விராஜ்ஜுக்கு மட்டுமின்றி பல பிரிவுகளிலும் விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X