காஜல் அகர்வாலுடன் க்ளோஸ்.. அந்த நடிகையின் அனுமதி இல்லாமலே கிஸ் பண்ணிட்டேன்.. ஆடுகளம் நரேன் பகீர்!

சென்னை: ஆடுகளம் நரேன் என அழைக்கப்பட்டு வரும் நாராயணன் பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா படத்திலேயே நடிகராக அறிமுகமானார். தாயின் மணிக்கொடி, ஜூலி கணபதி, அறை எண் 305ல் கடவுள், அஞ்சாதே, யுத்தம் செய், ஒஸ்தி என பல படங்களில் நடித்து வந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் நடித்ததன் பின்னர் தான் இவர் பிரபலமானார்.

நண்பன், மனங்கொத்தி பறவை, சகுனி, பிட்சா, சுந்தர பாண்டியன், முகமூடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆரம்பம், நய்யாண்டி, ஜிகர்தண்டா, புலி, ரெமோ, பைரவா, அசுரன், வாத்தி, 80ஸ் பில்டப் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

Aadukalam Naren opens up once he kissed Nazriya without her permission

திறமையான நடிப்புக்கு சொந்தக்காரரான இவர் மிஷ்கின் மற்றும் வெற்றிமாறன் படங்களில் அதிகளவில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். பாலு மகேந்திராவுடன் பல படங்களில் பணியாற்றிய இவர் வெற்றிமாறன் குறித்தும் சினிமாவில் தனக்கு நெருக்கமான நடிகைகள் பற்றியும் பேசியுள்ளார்.

காஜல் அகர்வாலுடன் க்ளோஸ்: கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் சித்ரா தேவிப்பிரியா கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க அவருடைய பாசமான அப்பாவாக ஆடுகளம் நரேன் நடித்து அசத்தியிருப்பார். அந்த படத்தில் நடித்ததன் பின்னர் காஜல் அகர்வால் ரொம்பவே எனக்கு க்ளோஸ் ஆகிவிட்டார். அவருக்கு பிறகு நஸ்ரியா ரொம்பவே பாசமாக பழகக் கூடியவர் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

Aadukalam Naren opens up once he kissed Nazriya without her permission

நஸ்ரியாவுக்கு முத்தம்: 2013 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடிப்பில் வெளியான நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவின் அப்பாவாக நடித்திருந்தேன். அந்த படத்தில் பாசமாக நஸ்ரியாவை கட்டிப்பிடித்து பேச வேண்டும். என்னை அறியாமல் அந்த காட்சியில் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்து விட்டேன். எல்லாரும் அந்த சீன் ரொம்ப சூப்பரா வந்திருக்குன்னு பாராட்டினாங்க.. அதன் பின்னர் நஸ்ரியாவை சந்தித்து மன்னிப்பு கேட்டேன். கிஸ் பண்றது பிளான் பண்ணல, அனுமதி வாங்காம கொடுத்துட்டேன் என்றேன். அவர் உடனே அவங்க அப்பாவை கூட்டிட்டு வந்து இது ரியல் அச்சன், நீங்க ரீல் அச்சன் அதெல்லாம் பிரச்சனை இல்லை என்றார். அவரை போல ஒரு சிறந்த நடிகையை நான் பார்த்ததில்லை என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X