ஆஹா கல்யாணம் வசூல் வெறும் 22 லட்சம்தானாம்!
ஆஹா கல்யாணம் படத்தின் மொத்த வசூலே ரூ 22 லட்சம்தான் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார்.
ஒவ்வொரு படத்தின் வசூலையும் பட விழாக்களில் போட்டு உடைப்பதை முன்பு கலைப்புலி சேகரன்தான் கச்சிதமாக செய்வார்.

கேயார்
இப்போது அந்தப் பணியைச் செய்பவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார். பல நிகழ்ச்சிகளில் பெரிய நடிகர்களின் படங்கள் செய்த வசூலைப் போட்டு உடைப்பது இப்போது இவர்தான்.

வசூல் மோசம்
நேற்று நடந்த நளனும் நந்தினியும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஆஹா கல்யாணம் படத்தின் வசூல் நிலவரத்தைச் சொன்னார்.
இத்தனைக்கும் நல்ல படம், பார்த்து ரசிக்கலாம் என்ற பாராட்டுக்களைப் பெற்ற படம் இது. ஆனால் வசூல் படுமோசம்.

22 லட்சம்தானாம்!
படம் வெளியாகி மூன்று வாரங்களாகிவிட்ட நிலையில், தமிழில் படத்தின் மொத்த வசூலே 22 கோடிதானாம்! என்று அதிர்ச்சியளித்தார் கேயார். இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ்
ஆஹா கல்யாணம் படத்தை புகழ்பெற்ற யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழில் அவர்களுக்கு முதல் படம் இது. ஆனால் முதல் அனுபவமே அவர்களுக்கு படுமோசமாக அமைந்துள்ளது.
போகிற போக்கில், மிச்சமிருக்கிற திரையரங்குகள் நிலைமை கவலைக்குரியதாகத்தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











