வாவ்.. பவி டீச்சருக்கு அடித்த லக்கி ப்ரைஸ்.. பிரிகிதா இப்ப விஜய் பட நடிகை!

ஆஹா கல்யாணம் பிரிகிதா விஜய்யின் 64வது படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Pavi Teacher | Thalapathy 64 : விஜய்யுடன் ஜோடி சேர்ந்த பிரிகிதா

சென்னை: இணையத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பவி டீச்சர் இப்போது வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம். தொலைக்காட்சி மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது இந்த தொடர்.

Aaha Kalyanam Pavi teacher is acting in Thalapathy 64

காதலில் தோல்வி அடைந்த இளைஞன் பிரசாத்தின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இத்தொடர். ஒவ்வொரு எபிசோடும் பல லட்சம் பார்வைகளை பெற்று வருகிறது.

இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிதா தான் இணையத்தின் லேட்டெஸ்ட் சென்சேஷன். பிரேமம் மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகமான ஃபேன்ஸ் இருப்பது பவி டீச்சர்க்கு தான். இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என இளைஞர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

பவியின் ஒவ்வொரு அசைவையும் நம்ம மீமர்கள், மீம்ஸாக்கி கலக்கி வருகின்றனர். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகமாக இடம்பெறுவது பவி டீச்சர் தான்.

இப்படி ஓவர் நைட்டில் நம் இளசுகளின் மனதை கொள்ளைக்கொண்ட பவி டீச்சர், அடுத்து வெள்ளித்திரையில் மின்ன வருகிறாராம். அதுவும் யார் படத்தில் என கேட்டால் ஷாக்காகிடுவீங்க.

விஜய்யின் தளபதி 64 படத்தில் தான் பிரிகிதா அறிமுகமாக உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் பவி டீச்சரை பிடித்து போட்டிருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்களுக்கும், பவி டீச்சர் ஃபேன்ஸ்க்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்திருக்கிறது இந்த செய்தி. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X