கணக்கு போட்டது சரிதான்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் சில போட்டியாளர்கள் எப்படியாவது டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என வெறிபிடித்து விளையாடி வருகின்றனர்.

பல போட்டியாளர்கள் இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமே என தற்போது வருத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

5 பேர் நாமினேஷன்

5 பேர் நாமினேஷன்


பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் மூலம் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர் எவிக்ஷன் புராசஸில் இடம் பெற்றனர்.

இந்த வார நாமினேஷன்

இந்த வார நாமினேஷன்

கடந்த வாரமே ஆஜித் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனிதா ஆரியிடம் தேவையில்லாமல் கோபப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்த வார நாமினேஷனிலும் ஆஜித் இடம் பிடித்ததால் இந்த வாரம் அவர்தான் வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டது.

ரம்யாவை அனுப்பனும்

ரம்யாவை அனுப்பனும்

அதே நேரத்தில் சக போட்டியாளரான ரம்யா ஆரி குறித்து அவதூறாக பேசி வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் இந்த வாரம் ரம்யாவை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கூறி வந்தனர்.

காரணம் நீயில்லை

காரணம் நீயில்லை

ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யாவின் தம்பி பரசுவும் இந்த வாரம் நீ வெளியே வந்தால் அதற்கு காரணம் நீயில்லை என்று கூறினார். இதனால் இந்த வாரம் தான் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிலையில் இருந்து வந்தார் ரம்யா.

இன்றையய எபிசோடில்

இன்றையய எபிசோடில்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஆஜித் வெளியேறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைய எபிசோடில் காட்டப்படும் என தெரிகிறது.

ரெட்கார்டு கொடுக்க வேண்டும்

ரெட்கார்டு கொடுக்க வேண்டும்

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து எல்லை மீறி நடந்து வருகிறார். ஆரியை அவன் இவன் என்று பேசியதோடு மைக்கையும் கழட்டி அடித்த பாலாஜியை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X