For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் மக்களை மகிழ்விக்க இந்த 60 நாட்களில் என்ன பண்ணீங்க என ஆஜீத்திடம் பிக் பாஸ் கேட்க, நான் நல்லா பாடி எல்லோரையும் சந்தோஷப்படுத்தினேன் எனக் கூறி மொக்கை வாங்கினார்.

  BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

  எந்தவொரு முன்னறிவிப்பும் ஐடியாவும் இன்றி போட்டியாளர்களை பிக் பாஸ் உள்ளே கூப்பிட்டு தனித் தனியாக பேச சொன்னதே பாராட்டுக்குரிய விஷயம் தான்.

  அப்போ தான் போட்டியாளர்களின் தனித்துவம் தெரியும். யார் தகுதியானவர்? யார் தகுதியற்றவர்? என்பதை தெரிந்து கொள்ள இது நிச்சயம் உதவும்.

  ரமேஷு.. ரமேஷு.. சரியான போடு போட்ட பிக் பாஸ்.. வாயடைத்துப் போன ஜித்தன்.. சிறப்பான தரமான சம்பவம்!

  இதுவும் போட்டி தான்

  இதுவும் போட்டி தான்

  பிக் பாஸ் வீட்டில் பாட்டுப் போட்ட உடனே, உடைகளை மாட்டிக் கொண்டு ஆடி அசத்திய போட்டியாளர்கள், இன்னைக்கு நீங்க என்ன பண்ணீங்க என எதுக்கு கேட்கிறாங்கன்னே புரிந்து கொள்ளாமல் பேசுவது, போட்டியாளர்களின் மெச்சுரிட்டியை காட்டுகிறது. பிக் பாஸ் வீட்டில் எந்த நேரமும் போட்டி வரும், அதற்கு தயாராக இருப்பவர்கள் தான் வெற்றி பெற முடியும். நேரம் கேட்டும், யோசித்து நேரத்தை வீணடிப்பவர்களும் வின் பண்ண முடியாது.

  கமல் சாரை பாராட்டி பாடினேன்

  கமல் சாரை பாராட்டி பாடினேன்

  பிக் பாஸ் வீட்டில் 60 நாட்களில் உங்களுக்கு தினமும் 50 ஓட்டுக்கள் போடும் ரசிகர்களுக்கு என்டர்டெயின் பண்ணும் விதமாக என்ன பண்ணீங்க என பிக் பாஸ் ஆஜீத்திடம் கேள்வியை முன் வைக்க, கமல் சார் பிறந்தநாள் போது, நான் அவருக்காக பாட்டு ரெடி பாடியதை ரொம்ப பாக்கியமா கருதுறேன்னு ஐஸ் வைக்க ஆரம்பித்த ஆஜீத்துக்கு பிக் பாஸ் ஆப்பு வைத்து விட்டார்.

  ஜூக் பாக்ஸ்

  ஜூக் பாக்ஸ்

  நான் தினமும் பிக் பாஸ் போட்டியாளர்களை குஷி பண்ணும் விதமாக நல்லா பாட்டுப் பாடுவேன். எல்லாரும் என்னை ஜூக் பாக்ஸ்ன்னு சொல்லுவாங்க பிக் பாஸ் என்றார் ஆஜீத். இது சூப்பர் சிங்கர் ஷோ இல்லை என்பது போல, பிக் பாஸில் உங்களது பங்களிப்பு என்ன ஆஜீத் என்ற அழுத்தமாக கேட்டதும் அப்படியே ஆஃப் ஆனார் ஆஜீத்.

  பதில் தெரியாத மாணவனாய்

  பதில் தெரியாத மாணவனாய்

  பரிட்சை நேரத்தில் பதில் தெரியாத மாணவனாய் முழிப்பது போல, என்னத்த சொல்றது பிக் பாஸ் என தலையை டோட்டலாக தொங்கப் போட்டு விட்டார் ஆஜீத். பாட்டு பாடுறதை தவிர பிக் பாஸ் வீட்டில் ஒன்னுமே செய்யலையே என ஆஜீத் நல்லாவே உணர்ந்திருப்பார் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  சொல்லி இருக்கலாம்

  சொல்லி இருக்கலாம்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கும் டாஸ்க்குகளில் போட்டியிட்டு ஜெயித்தது. நிஷா, கேபியுடன் கேப்டன் டாஸ்க்கில் போட்டியிட்டு கேப்டன் பதவியை பெற்றது. கேப்டனாக இருந்த போது பெருசா எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டது என ஆஜீத் செய்த சிலவற்றை சொல்லி இருக்கலாம். ஆனால், சொல்லாமல் அப்படியே அமைதியாகி விட்டார்.

  வெளியே கிளம்பலாம்

  வெளியே கிளம்பலாம்

  ஆஜீத் எதுவும் பேசாமல் நேரத்தை கடத்தியதை பார்த்த ரசிகர்கள், தம்பி இந்த வாரமே நீ வெளியே போயிடு என கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். ரம்யா பாண்டியனால் கிடைத்த பிக் பாஸ் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸால் தான் 60 நாட்களை கடந்து நீ பிக் பாஸ் வீட்டில் இருக்க என்றும் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த வாரம் ஆஜீத் தப்பிக்க ஏதாவது மேஜிக் நடக்கிறதா என்று பார்க்கலாம்.

  English summary
  Aajeedh also not gave a perfect contribution answer to Bigg Boss interrogation for what he do for the fans in 60 days of Bigg Boss.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X