Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஷேம் ஷேம் பப்பி ஷேம்.. ஜிப்பு போட மறந்த ஆஜீத்.. கேபி கூட ரவுடி பேபிக்கு இன்னா டான்ஸ் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10ம் நாள் எபிசோடில் பெருசா சண்டை எதுவுமே இல்லை, ஃபுல்லா ஆடலும் பாடலும் ஷோவாகவே சென்றது.
விமானத்தில் இருந்து டிரெஸ் பார்சல் தரையிறங்குவது போன்ற அறிவிப்புடன் முதல் சூட் கேஸ் வந்தது.
அதில், ஆஜீத் மற்றும் கேப்ரில்லா இணைந்து ரவுடி பேபி பாட்டுக்கு நடனம் ஆட வேண்டும் என்கிற ஆர்டர் போடப்பட்டிருந்தது.
ஆஜீத்தின் அந்த இடத்தில் கை வைத்த கேபி.. என்னடா புதுக் கதை ஆரம்பிக்கிறீங்க போல.. எல்லாம் அதுக்கா?
இப்போதான் ஆரம்பம் ஆகுது
பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் என்னடா இன்னும் லவ் டிராக் ஆரம்பிக்காமல் போரடிக்குதே, ஒரே மொக்கை சண்டையா போட்டு இரிடேட்டிங் பண்றாங்களேன்னு பார்த்தா, ஆஜீத்துக்கும், கேபிக்கும் பிசிக்கல் டச் கொடுக்க பிளான் பண்ணிட்டார் பிக் பாஸ். எவிக்ஷன் ஃப்ரீ பாஸை தேடும் சாக்கில் ஆஜீத்தின் இடுப்பில் கை வைத்து புது ரூட் ஒன்றை போட்டுட்டாங்க..
முதல் ஜோடி
இந்த வாரம் முழுவதும் ஏகப்பட்ட புதிய புதிய போட்டிகள் அரங்கேறி பிக் பாஸ் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. பிக் பாஸ் வீட்டின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியின் முதல் ஜோடியாக ஆஜீத்தும், கேபியையும் கோர்த்து விட்டார் பிக் பாஸ். டிரெஸ் பெட்டி வந்ததும் எடுத்துக்கிட்டு இருவரும் பாத்ரூம் ஏரியாவுக்கு ஓடினாங்க.
ஷேம் ஷேம்
கேபி டிரெஸ் எடுத்துக்கிட்டு பாத்ரூமுக்குள் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணினார். ஆனால், ஆஜீத், வெளியவே சட்டை பனியனை எல்லாம் கழட்டி விட்டு, பேர் பாடியாக ஷேம் ஷேமாக தனது உடைகளை மாற்றிக் கொண்டு, ரவுடி பேபி பாட்டு போட்ட உடனே முதல் ஆளாக நடன மேடையில் ஏறினார். பின்னாடியே கேபியும் வந்து கலந்து கொண்டார்.
ஜிப்பு போடல
மேலாடை இல்லாமல் பாத்ரூம் ஏரியாவில் டிரெஸ் மாத்தியது மட்டுமின்றி, அவசரத்தில் பேன்ட் ஜிப்பு போடாமல் ஆடிய ஆஜீத், சட்டென அதனை உணர்ந்து கொண்டு, ஃபேன்ட் ஜிப்பை மாட்டினார். நல்ல வேளை எதுவும் மாட்டிக் கொள்ளாமல் ரவுடி பேபி பாட்டுக்கு இருவரும் ஒட்டி உரசி நல்லாவே டான்ஸ் ஆடுனாங்க.
ஆடத் தெரியுமா
சூப்பர் சிங்கர் சுட்டிக் குழந்தை ஆஜீத்துக்கு நல்லா பாடத் தெரியும் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆனால், அவருக்கு நல்லா ஆடத் தெரியும் என்று இந்த எபிசோடில் தான் பிக் பாஸ் ரசிகர்கள் கண்டு பிடித்தார்கள். கேபியை பற்றி சொல்லவே தேவையில்லை. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலே கலக்கியவர் இங்கேயும் ஆடி அசத்தி விட்டார்.
லவ் டிராக்
கேபிக்கும், ஆஜீத்துக்கும் இடையே புதுசா லவ் டிராக்கை ஆரம்பிக்க பிக் பாஸ் அடி போடுகிறார் என்பதை சில சீன்களால் யூகிக்க முடிந்த நிலையில், டான்ஸ் டாஸ்க்கில் இருவரையும் ஜோடி சேர்த்து விட்டு, சிறப்பான வேலையை பிக் பாஸ் அங்கிள் செய்கிறார் என்பதை நல்லாவே புரிந்து கொள்ள முடிகிறது. சீக்கிரமே அந்த கொடுமையையும் கண்டு ரசிப்போம்.