கிள்ளுறாரு.. கடிக்கிறார் சார்.. ரியோ மேல கேஸ் போட ரெடியான ரம்யா பாண்டியன்.. என்ன பாஸ் இதெல்லாம்!

சென்னை: பிறர் ரகசியத்தை சொல்ல வைத்து ஹவுஸ்மேட்களிடம் அடுத்த வாரத்திற்கான கன்டென்ட் வாங்க முயற்சித்த கமலின் முயற்சி படுதோல்வியை சந்தித்தது.

யாருமே ரகசியம் சொல்லாமல், சேஃப் கேம் ஆடி ஜாலியா அந்த டாஸ்க்கில் இருந்து தப்பித்துக் கொண்டனர்.

ஆனால், கடைசியா ரியோ கிள்ளுவாரு, கடிப்பாரு என்கிற அதிர்ச்சியான ரகசியம் வெளியானது.

தூண்டில் போட்ட கமல்

தூண்டில் போட்ட கமல்

கன்ஃபெஷன் ரூமில் ஆரி சொன்ன ரகசியம் வெளியே வருமா? என்பதை கண்டுபிடிக்க கமல் போட்ட தூண்டில் வொர்க்கவுட் ஆகவில்லை. மேலும், போட்டியாளர்களிடையே அடுத்தவங்க ரகசியம்னு ஏதாச்சும் சொல்லி, அடுத்த வாரத்திற்கான சண்டையை சிண்டு முடிந்து விடலாம் என்று பார்த்தாலும், அதுவும் நடக்கவில்லை.

ஷிவானி சொன்ன ரகசியம்

ஷிவானி சொன்ன ரகசியம்

ஏகப்பட்ட போட்டியாளர்கள் ரகசியம் சொல்கிறேன் என்கிற பேரில், மொக்கைப் போட்டனர். நம்ம ஷிவானி மட்டும் என்ன விதிவிலக்கா, கேபி போட்டோ வர, கேபி நல்லா தூங்குவா, சங்குச்சக்கரம் மாதிரி வீட்டில சுத்தி சுத்தி வந்து எல்லோரையும் என்டர்டெயின் பண்ணுவா என எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தையே பேசிவிட்டு சென்றார்.

ஆஜீத் பற்றி ரமேஷ் சொன்ன ரகசியம்

ஆஜீத் பற்றி ரமேஷ் சொன்ன ரகசியம்

ஜித்தன் ரமேஷுக்கு ஆஜீத் போட்டோ வர, சனம் ஷெட்டிக்கு ஹியூமர் சென்ஸ் இருக்குன்னு ரியோ சொன்னதை போல, ஆஜீத்துக்கும் அபாரமான ஹியூமர் சென்ஸ் இருக்கு சார் என யாருமே பார்த்திராத அரிய தகவலை ரமேஷ் சொன்ன அழகில் ஏகப்பட்ட நகைச்சுவை இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரியோ கடிப்பாரு

ரியோ கடிப்பாரு

ஆஜீத் குக்கூ தொப்பியை மாட்டிக் கொண்டு பேசும் போது, அவர் மட்டும் தான் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு ரகசியத்தை சொன்னார். ரியோ ராஜ் போட்டு நல்லா கிள்ளுவாரு என்றும் கடித்து வைப்பார் என்றும் அதுக்காகவே அந்த மனுஷன் கிட்ட இருந்து தப்பிக்க ஓடும்போது கீழேயும் விழுந்திருக்கேன் சார் என புலம்பித் தீர்த்து விட்டார்.

பிசிக்கல் வயலன்ஸ்

பிசிக்கல் வயலன்ஸ்

கிள்ளுவது சரி என கமல் சொல்ல, ரியோ கடிப்பாரு சார் என்றதும். கடிப்பாரா.. அய்யோ இது பிசிக்கல் வயலன்ஸ்ல வருதேன்னு கமல் எச்சரிக்க, அதுலயாங்கய்யா வருதுன்னு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல ரியோ ரியாக்‌ஷன் கொடுத்தார். ஜாலியாத்தான் சார் என் தம்பி கடிப்பான் என நிஷ சப்போர்ட் வேற.

கேஸ் போடுவேன்

கேஸ் போடுவேன்

ஆஜீத் சொல்லும் போது உடனே எந்திரிச்சு பேசிய ரம்யா பாண்டியன், ஆமாம் சார், என்னை கூட கடிச்சிட்டாரு சார். நான் இதுக்காக கேஸ் போடுவேன்னு சொல்லியும் கேட்கல சார் என பாதிக்கப்பட்ட ரம்யாவும் கமலிடம் நல்லா போட்டுக் கொடுத்துவிட்டு, பவ் பவ் காட்டினார். பாவம் ரியோ மனைவி ஸ்ருதி பார்த்துருப்பாங்களே!

கடுப்பான கமல்

கடுப்பான கமல்

யாருமே ஒழுங்கா நான் நினைச்ச மாதிரி ரகசியத்தை சொல்லவில்லை என்பது போல சேஃப் கேம் ஆடிக் கொண்டும், சிரித்து, காமெடி பண்ணி விளையாடிக் கொண்டிருந்தும் இருந்த ஹவுஸ்மேட்களை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டார். அப்புறம் தான் ஆரி சொன்ன ரகசியத்தை ஓப்பன் பண்ணி கொளுத்திப் போட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X