ஆஜீத் நீங்க தான் பெட்டியைத் தூக்கணும்.. கடைசி வரை சேவ் ஆகாமல் கதிகலங்கிய ரம்யா.. வேற லெவல் புரமோ!
சென்னை: ரசிகர்கள் இத்தனை வாரம் எதிர்பார்த்த அந்த ஆஜீத் எவிக்ஷன் இன்று தான்.
Recommended Video

ஆஜீத் அம்மா சொன்னது போல, இன்னும் மூன்று நாட்கள் தான் வீட்டுக்கு வந்துடுவன்னு சொன்னது பலித்து விட்டது.
90 நாட்களாக காப்பாற்றிய மக்களுக்கு நிச்சயம் ஆஜீத் நன்றி சொல்வார் என்றே தெரிகிறது. குறிப்பாக, அவருக்கு பதில் பலிகடாவாகி வெளியேறிய போட்டியாளர்களுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

பாலாவுக்கு கொடிய தண்டனை
கமல் பற்றியும் பிக் பாஸ் ஷோ பற்றியும் ஓவரா பேசினால் இப்படித்தான் கன்ஃபெஷன் அறையில் வைத்து கதறவிட்டு அனுப்புவார்கள். பாலாவை வெளியே அனுப்பாமல் இன்னும் இரண்டு வாரத்துக்கு உள்ளே வைத்து அழவைப்பது ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவதை விட கொடிய தண்டனையாகவே தெரிகிறது.

ஷிவானி சேவ்
ஆஜீத் ரம்யா தான் முதலில் சேவ் ஆவார் என நேற்று சொன்ன நிலையில், முதல் ஆளாக கேபியை சேவ் பண்ணி ரம்யா பாண்டியனை கதற விட்ட கமல், இன்றைய எபிசோடில், சோமசேகர், ஷிவானி நாராயணனை அடுத்தடுத்து சேவ் செய்துள்ளார் என்பது புரமோவிலே தெரிகிறது. அம்மா திட்டியதால் ஷிவானி சேவ் ஆகிவிட்டார்.

மரண பயம்
ரம்யாவுக்கு இந்நேரம் தனது தம்பி சொன்ன வார்த்தை எல்லாம் நினைவில் வந்து சென்றிருக்கும். கடைசி வரை ரம்யாவை சேவ் செய்யாமல், ஆஜீத்துடன் பெட்டியை தூக்க வைத்த நிலையில், பரமக்குடிக்காரர் மரண பயத்தை காட்டி விட்டார். இப்போ சிரி ஆத்தா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அந்த நாள்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின்னு நினைச்சு கடைசியில் ஆஜீத்துக்கு டைட்டிலை கமல் தூக்கி கொடுப்பது போல மார்பிங் வீடியோக்களை எல்லாம் போட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு ஒவ்வொரு வாரமும் ஆஜீத்தின் எவிக்ஷனுக்காக காத்திருந்த அந்த நாள் வந்துவிட்டது. நல்ல நடிகராக வாழ்த்துக்கள்!

சிகப்பு, பச்சை காமெடி
சிகப்பு ஒயரை கட் பண்ணா தான் பாம் வெடிக்காது என ஏகப்பட்ட திரைப்படங்களில் பயன்படுத்திய அதே யுக்தியை மீண்டும் சிவப்பு ஸ்டிக்கர், பச்சை ஸ்டிக்கர் ஒட்டி பிக் பாஸ் குழு அலப்பறை செய்து வருகிறது. இன்னுமா இந்த சிகப்பு, பச்சை காமெடியை பண்ணிட்டு இருக்கீங்க என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











